ETV Bharat / bharat

கரோனா வைரஸ் பரிசோதனை: அடையாள அட்டை இல்லாதவர்கள் பாதிப்பு

author img

By

Published : Jun 20, 2020, 10:42 PM IST

கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்வதற்கு அடையாள அட்டைகளை அரசு அத்தியாவசியமாக்கியதால், வீடு இல்லாதவர்களும் அடையாள அட்டைகள் இல்லாதவர்களும் கரோனா பரிசோதனை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

with-no-id-proof-homeless-struggle-to-get-tested-for-coronavirus

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழலில், இதைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிப்பதே ஒரே வழி என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கரோனா வைரஸ் மேற்கொள்வதற்கு அரசு சார்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளால் அரசு அடையாள அட்டை இல்லாமல் மக்கள் யாரும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள முடியாது என்ற நிலை எற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு வீடில்லாத மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு, மருத்துவர்கள் எவ்வாறு சிகிச்சையளிப்பது என தெரியாமல் உள்ளனர்.

இது குறித்து மருத்துவர் நிமேஷ் தேஷாய் ஈ டிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ''அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கும், வீடில்லாத மக்களுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகிறோம்.

மனநலம் பாதிக்கப்பட்ட இருவர் கரோனா அறிகுறியுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அது மற்றவர்களுக்கு பரவக்கூடும்.

ஆனால் பரிசோதனை மையத்தில் அவர்களை அடையாள அட்டைகள் சமர்பித்தால் மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும் என கூறியிருக்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கரோனா வைரஸ் மேற்கொள்ள அரசு சில விதிமுறைகளை அறிவிக்க வேண்டும்'' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.