கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாட்டில் இதுவரை 19,984 கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 640 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 239 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,178ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம், கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் டெல்லியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை குஜராத் எட்டியுள்ளது.
அம்மாநிலத்தில் இதுவரை 36,829 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 2,178 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 34,651 பேருக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது. இப்பட்டியலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 5,218 பேர் பாதிக்கப்பட்டும், 251 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம், இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 50 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதில் குஜாராத்தில் மட்டும் 19 உயிரிழப்புகள் ஆகும். இதன்மூலம், அம்மாநிலத்தில் இத்தொற்றால் சிகிச்சை பலனின்றி 90 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: சமூக இடைவெளியுடன் முத்தப் போட்டி... கடை திறப்பில் ருசிகரம்!