விப்ரோ நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான அசிம் பிரேம்ஜி 2019 ஜூலை 30ஆம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அசிம் ஓய்வு பெற்றாலும் ஐந்து ஆண்டு காலம் வரை நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக செயல்படுவார் என்றும், அவரே நிறுவனராக தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரைத் தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை அவரது மகனான ரிஷாத் பிரேம்ஜி ஏற்கவுள்ளார். ரிஷாத் ஜூலை மாதம் 31ஆம் தேதியில் இருந்து தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.