கோவிட் - 19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸால் இதுவரை 17 வெளிநாட்டினர் உட்பட 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 17 வெளிநாட்டினரில் 16 இத்தாலியர்கள், ஒரு கனடியர் என அரசாங்க தகவல் உறுதி செய்துள்ளது.
ஐ.சி.எம்.ஆரின் பிரிவின் கொள்ளை நோயியல் - I (ECD-I) துறையின் தலைவர் ராமன் ஆர். கங்ககேத்கர், ’கொரோனா வைரஸுக்கு எதிரான மருத்துவ ஏற்பாடுகளை முன்னெடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகளில் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும் தடுப்பூசியைத் தயாரிப்பதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. புனேவின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் (என்.ஐ.வி) அறிவியலாளற்களின் முயற்சிகள் வெற்றியை நோக்கி நகர்ந்துக் கொண்டேயிருக்கிறது. வைரஸ்கள் தொடர்பான எந்தவொரு ஆராய்ச்சியையும் செய்வதற்கு ஒரு முக்கிய தேவையாகும் கருதபப்டுவது அதன் மூலம்.
தற்போது ஏறத்தாழ 11 தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ்கள் ஆய்வுக்கு கிடைக்கின்றன. விரைவான மருத்துவ பரிசோதனைகள், ஒப்புதல்களுடன் கூடிய விரைவில் ஒரு தடுப்பூசியை உருவாக்க நாங்கள் முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். ஆனால், அதனை நிறைவாக்க ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் காலம் பிடிக்கும்” என்றார்.
மாதிரிகளை பரிசோதிப்பதற்காக இந்திய அரசு 52 ஆய்வகங்களை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக் கண்டறிதலுக்கான திறனை மேம்படுத்துவதற்காக COVID-19 க்கான மாதிரி சேகரிப்பில் உதவ 57 ஆய்வகங்கள் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், பீதி அடைய வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு அணுகுமுறையில் கவனம் செலுத்தி வரும் அரசுக்கு பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் வசதிகள் இருப்பதால் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியுமா?