ETV Bharat / bharat

'கரோனா வந்தால் மம்தாவை ஓடிப்போய் கட்டிப்பிடிப்பேன்' - பாஜக தேசிய செயலாளர்! - பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா

எனக்கு கரோனா வந்தால், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஓடிப்போய் கட்டிப்பிடிப்பேன் என, பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

bjp
jp
author img

By

Published : Sep 28, 2020, 4:47 PM IST

கொல்கத்தா: எனக்கு கரோனா வந்தால், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஓடிப்போய் கட்டிப்பிடிப்பேன் என, பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக சமீபத்தில் வெளியிட்ட தேசிய தலைவர் பட்டியலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த அனுபம் ஹஸ்ராவிற்கு தேசிய செயலாளர் பொறுப்பு கிடைத்தது. இந்நிலையில் அனுபம், எனக்கு கரோனா வந்தால் மம்தா பானர்ஜியை ஓடிப்போய் கட்டிப்பிடிப்பேன் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மேற்கு வங்கம், சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பருய்பூரில் பாஜக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "நமது கட்சியினர் கரோனாவை விட மிகப்பெரிய விரோதியிடம் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அது வேறு யாருமல்ல. மம்தா பானர்ஜி தான். எனக்கு மட்டும் கரோனா பாதிப்பு வந்தால் உடனே ஓடிப் போய் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கட்டிப் பிடித்துக் கொள்வேன். அப்போது தான், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் வலியை அவர் புரிந்துகொள்வார்" எனத் தெரிவித்தார் மேலும், இந்தக் கூட்டத்தில் அனுபம் ஹஸ்ரா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவரும் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.