சமீபத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ட்வீட்டரில் தங்களது பெயர்களுக்கு முன்னால் 'காவலாளி' என்ற பொருள் கொண்ட “சௌகிதார்” என்று வைத்து கொண்டனர். இதற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் வந்தது.
இந்நிலையில் இது குறித்து அகில இந்திய மஜ்ல்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் துணைத் தலைவர் அக்பருதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அக்பருதீன் ஒவைசி கூறுகையில், "மோடியும், அமித்ஷாவும் ட்வீட்டரில் மட்டும் பெயரை சேர்த்துக் கொண்டனர். இருவரும் ஆதார் கார்டு மர்றும் வாக்காளர் அட்டையில் “சௌகிதார்” என்ற பெயரை சேர்க்க வேண்டியது தானே... மோடி காவலாளி என்றால் அவருக்கு தொப்பியும், விசிலும் நான் கொடுக்கிறேன்" என்று கிண்டலடித்துள்ளார்.