தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் சார்பில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,காங்கிரஸ், பாஜக ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என தெரிவித்தார். தன் உயிர் இருக்கும்வரை அதற்காக போராடுவேன் என குறிப்பிட்ட அவர், அவர்கள் (காங்கிரஸ், பாஜக) இருவரும் இதுவரை தேசத்தின் தண்ணீர்,மின்சார பிரச்னையை தீர்த்துவைக்க முயற்சி கூட செய்ததில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
ராகுல், மோடியை திருடன் என சொல்லி நாட்டை சிறுமைப்படுத்தியுள்ளதாக கூறினார்.தான் கட்சி ஆரம்பித்த நேரத்தில் இரண்டு மக்களவை உறுப்பினர்தான் இருந்தார்கள் என தெரிவித்த அவர், ஆனால் தற்போது அதிகமாகி உள்ளார்கள் என சுட்டிக்காட்டினார்.