ராஜஸ்தான் துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "இரு மதத்தினருக்கு இடையே பிரிவினை உண்டாக்கி இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மே 23 ஆம் தேதி ஆட்சி அமைக்கும். இந்தத் தேர்தலை பொருத்தவரை வளர்ச்சி மற்றும் நாட்டு பிரச்னைகள் மட்டுமே முக்கியத்துவம் பெரும். மந்திர்-மஸ்ஜித் போன்றவை மக்களிடையே செல்லுபடி ஆகாது. 2014 ஆண்டு இருந்த மோடி அலை இந்த முறை இல்லை. அனைத்து இந்திய அளவில் பாஜகவை வீழ்த்த கூடிய ஒரே கட்சி காங்கிரஸ்தான்" என்றார்.