ETV Bharat / bharat

'பிரிவினைவாதிகளின்  குறைகள் காலாவதியாகிவிட்டன' - உள்துறை அமைச்சர் அமித் ஷா - உள்துறை அமைச்சர் அமித் ஷா

போடோலாந்து  தேசிய ஜனநாயக முன்னணி உடன், அனைத்து போடோ மாணவர் சங்கமும் (ABSU) ஒருங்கிணைந்த போடோ மக்கள் அமைப்பும் (UBPO) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

amit shah
amit shah
author img

By

Published : Feb 5, 2020, 10:21 AM IST

அசாமில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்கு கரை 15 லட்சம் போடோக்களுக்கான அவர்களின் இறையாண்மைக்காக போராடும் போர்க்களமாகும். கிளர்ச்சிக் குழுக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சண்டையில், பல ஆண்டுகளாக பல குடிமக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். பல தலைமுறையாகப் பிரிவினைவாத போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க , மத்திய மற்றும் அசாம் அரசாங்கங்கள் போடோ சமாதான ஒப்பந்தத்தில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியின் (என்.டி.எஃப்.பி.) நான்கு பிரிவுகளும் கையெழுத்திட்டுள்ளன.

போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி உடன், அனைத்து போடோ மாணவர் சங்கமும் (ABSU), ஒருங்கிணைந்த போடோ மக்கள் அமைப்பும் (UBPO) புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பிரிவினைவாதிகளின் குறைகள் காலாவதியானது என்றும் அசாமின் பிராந்திய ஒருமைப்பாடு உறுதி செய்யப்படுவதாகவும் அமித் ஷா கூறினார்.

தற்போதுள்ள போடோலாந்து பிராந்திய பகுதி மாவட்டங்கள் (பி.டி.ஏ.டி.), போடோலாந்து பிராந்திய சபை (பி.டி.சி.) என மறுபெயரிடப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் போடோலாந்து பிராந்திய பகுதி மாவட்டங்களை ஒட்டியுள்ள 3,000 கிராமங்களைச் சேர்க்க ஒரு ஆணையம் நியமிக்கப்படும். இப்பகுதியில் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம், ரயில்வே கோச் தொழிற்சாலை, மருத்துவக் கல்லூரி, புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை நிறுவப்படும்.

எஸ்.டி. பட்டியலில் மலை மாவட்டங்களில் வாழும் போடோக்களை சேர்ப்பது, போடோ மொழியைப் பாதுகாக்க அதை அசாமில் ஒரு இணை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிப்பது போன்றவை இந்த அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன. போடோலாந்து பிராந்திய பகுதி மாவட்டங்கள், அசாமின் பிற மாவட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய யூனியன் பிராந்திய கவுன்சில் அமைப்பதை எதிர்த்து பல அமைப்புகள் அசாம் பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஒரு சிறப்பு மாநிலத்திற்கான கோரிக்கைகள் குறித்து அனைத்து போடோ மாணவர் சங்கம் மெளனம் காத்துவருகிறது. இந்தச் சூழ்நிலைகளுக்கு மத்தியில், பார்வையாளர்கள் இந்தச் சமாதான ஒப்பந்தம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வடகிழக்கில் அதன் மையப்பகுதியை உலுக்கி வரும் வேளையில், இந்த ஒப்பந்தம் பாஜக அணிக்கு, குறிப்பாக அசாமில் ஒரு அவகாச காலமாக வருகிறது. கடந்த 27 ஆண்டுகளில் போடோலாந்து பிரச்சினை குறித்து மூன்று முத்தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இது புவியியல் ரீதியான சிக்கல்கள், குழுவின் கோரிக்கைகளின் தீவிரத்தை காட்டுகிறது. 1981ஆம் ஆண்டில் ரஞ்சன் டைமரியால் போடோ பாதுகாப்புப் படை உருவானது. இனப் பழங்குடியினருக்குச் சிறப்பு அரசு கோரி அனைத்து போடோ மாணவர் சங்கம் நடத்திய தாக்குதல்கள் அசாம் மாநிலத்தையே கலக்கிவிட்டன.

பழங்குடியினரின் அரசியலமைப்பு பாதுகாப்பு, போடோ பகுதிகளின் வளர்ச்சி ஆகிய கோரிக்கைகளுடன் தொடங்கிய இயக்கம் அசாமி மொழி அரசின் அலுவலக மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் பிரிவினைவாதத்தை நோக்கி திரும்பியுள்ளது. பிப்ரவரி 1993இல், போடோலாந்து தன்னாட்சி சபையை (பிஏசி) உருவாக்கும் ஒப்பந்தத்தில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அதிலிருந்து விலகி ஒரு இன அழிப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியது. 2003ஆம் ஆண்டில், 4 மாவட்டங்களை உள்ளடக்கிய போடோலாந்து பிராந்திய சபையை நிறுவ இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி இந்த வாய்ப்பை மீண்டும் மறுத்து, அதன் வன்முறை வழிகளைத் தொடர்ந்தது. சமீபத்திய ஒப்பந்தம் நம்பிக்கையைத் தூண்டினாலும் கடந்த காலம் மீண்டும் நிகழக்கூடும் என்ற அச்சங்கள் உள்ளன.

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், பிரிட்டிஷ் இந்தியாவின் வடகிழக்கு பகுதி அசாம், சுதேச மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, மிசோரம் மாநிலங்களை உள்ளடக்கியதாக இருந்தது. மணிப்பூர், திரிபுரா ஆகியவை 1956 முதல் 1972 வரை யூனியன் பிரதேசங்களாகவே இருந்தன. வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலங்கள் வடகிழக்கு கவுன்சிலின் கீழ் அவர்களின் வளர்ச்சிக்கான நிறுவனமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 238 இனக்குழுக்களின் தொட்டிலாக இருப்பதால், இந்தப் பகுதி தொடர்ந்து படையெடுப்பு அச்சுறுத்தல்கள், கலாசார அடக்குமுறைகளால் பாதிக்கப்படுகிறது.

நாட்டின் பிற பகுதிகளை விட வளர்ச்சியடையாதது பற்றிய புரிதல்கள் நிலையான சமூக அரசியல் போர்களுக்கு மற்றொரு காரணம். அசாமில் அமைதியை மீட்டெடுப்பது குறித்து மத்திய அரசு நம்பிக்கையுடன் இருந்தாலும், நாத்-யோகி சமூகம் எஸ்.டி. வகைப்படுத்தலுக்கான புதிய கோரிக்கையைத் தொடங்கியது. இதற்கிடையில், மற்றொரு பழங்குடியினர் கரோஸ் அவர்களின் உரிமைகளுக்காக ஒரு தனி தன்னாட்சி குழுவைக் கோரினர். போடோஸ் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பல குழுக்கள் மிரண்டு போயுள்ளன. அனைவருக்கும் அமைதியை மீட்டெடுக்க மத்திய அரசு ஒரு இணக்கமான தீர்வை அடைய வேண்டும்.

இதையும் படிங்க: முசாபர்பூர் பாலியல் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

Intro:Body:

சமாதானத்தை வளர்த்துக் கொள்ளுமா?

அசாமில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்கு கரை 15 லட்சம் போடோக்களுக்கான அவர்களின் இறையாண்மைக்காக போராடும்  போர்க்களமாகும்,. கிளர்ச்சிக் குழுக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சண்டையில்பல ஆண்டுகளாக பல குடிமக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். பல தலைமுறையாக பிரிவினைவாத போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய மற்றும் அசாம் அரசாங்கங்கள் போடோ சமாதான ஒப்பந்தத்தில் போடோலாந்து  தேசிய ஜனநாயக முன்னணியின் (என்.டி.எஃப்.பி) நான்கு பிரிவுகளும் கையெழுத்திட்டுள்ளன. போடோலாந்து  தேசிய ஜனநாயக முன்னணி உடன்அனைத்து போடோ மாணவர் சங்கமும் (ABSU) மற்றும் ஒருங்கிணைந்த போடோ மக்கள் அமைப்பும் (UBPO) புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பிரிவினைவாதிகளின்  குறைகளை காலாவதியானது என்றும் அசாமின் பிராந்திய ஒருமைப்பாடு உறுதி செய்யப்படுவதாகவும் திரு ஷா கூறினார்.

தற்போதுள்ள போடோலாந்து பிராந்திய பகுதி மாவட்டங்கள் (பி.டி.ஏ.டி) போடோலாந்து  பிராந்திய சபை  (பி.டி.சி) என மறுபெயரிடப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் போடோலாந்து பிராந்திய பகுதி மாவட்டங்களை  ஒட்டியுள்ள 3,000 கிராமங்களை சேர்க்க ஒரு ஆணையம் நியமிக்கப்படும். இப்பகுதியில் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம்ரயில்வே கோச் தொழிற்சாலைமருத்துவ கல்லூரி மற்றும் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை நிறுவப்படும். எஸ்.டி பட்டியலில் மலை மாவட்டங்களில் வாழும் போடோக்களை சேர்ப்பது, , போடோ மொழியை பாதுகாக்க அதை  அஸ்ஸாமில் ஒரு இணை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிப்பது போன்றவை இந்த அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக  உள்ளன. போடோலாந்து பிராந்திய பகுதி மாவட்டங்கள் மற்றும் அசாமின் பிற மாவட்டங்களை உள்ளடக்கிய யூனியன் பிராந்திய கவுன்சில் அமைப்பதை எதிர்த்து பல அமைப்புகள் அசாம் பந்த் அழைப்பு விடுத்துள்ள நிலையில்ஒரு சிறப்பு மாநிலத்திற்கான கோரிக்கைகள் குறித்து அனைத்து போடோ மாணவர் சங்கம் மெளனமாக  உள்ளது. இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில்பார்வையாளர்கள் இந்த சமாதான ஒப்பந்தம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வடகிழக்கில்  அதன் மையப்பகுதியை உலுக்கி வரும் ஒரு நேரத்தில்இந்த ஒப்பந்தம் பாஜக அணிக்குகுறிப்பாக அசாமில் ஒரு அவகாச காலமாக வருகிறது. கடந்த 27 ஆண்டுகளில்போடோலாந்து  பிரச்சினை குறித்து 3 முத்தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இது புவியியல் ரீதியான  சிக்கல்கள் மற்றும் குழுவின் கோரிக்கைகளின் தீவிரத்தை காட்டுகிறது. 1981 ஆம் ஆண்டில் ரஞ்சன் டைமரியால் போடோ பாதுகாப்புப் படை உருவானது மற்றும் இன பழங்குடியினருக்கு சிறப்பு அரசு கோரி அனைத்து போடோ மாணவர் சங்கம் நடத்திய தாக்குதல்கள் அசாமைத் கலக்கி விட்டன.  பழங்குடியினரின் அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் போடோ பகுதிகளின் வளர்ச்சி ஆகிய கோரிக்கைகளுடன் தொடங்கிய இயக்கம் அசாமி மொழி அரசின் அலுவலக  மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் பிரிவினைவாதத்தை நோக்கி திரும்பியுள்ளது. பிப்ரவரி 1993 இல்போடோலாந்து  தன்னாட்சி சபையை (பிஏசி) உருவாக்கும் ஒப்பந்தத்தில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகுபோடோலாந்து  தேசிய ஜனநாயக முன்னணி அதிலிருந்து விலகி ஒரு இன அழிப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியது. 2003 ஆம் ஆண்டில்4 மாவட்டங்களை உள்ளடக்கிய போடோலாந்து  பிராந்திய சபையை  நிறுவ இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. போடோலாந்து  தேசிய ஜனநாயக முன்னணி இந்த வாய்ப்பை மீண்டும் மறுத்துஅதன் வன்முறை வழிகளைத் தொடர்ந்தது. சமீபத்திய ஒப்பந்தம் நம்பிக்கையைத் தூண்டினாலும்கடந்த காலம் மீண்டும் நிகழக்கூடும் என்ற அச்சங்கள் உள்ளன.

பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர்பிரிட்டிஷ் இந்தியாவின் வடகிழக்கு பகுதி அசாம் மற்றும் சுதேச மாநிலங்களான நாகாலாந்துமேகாலயா மற்றும் மிசோரம் மாநிலங்களை உள்ளடக்கியதாக இருந்தது.. மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகியவை 1956 முதல் 1972 வரை யூனியன் பிரதேசங்களாகவே இருந்தன. வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலங்கள் வடகிழக்கு கவுன்சிலின் கீழ் அவர்களின் வளர்சிக்கான நிறுவனமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 238 இனக்குழுக்களின் தொட்டிலாக இருப்பதால்இந்த பகுதி தொடர்ந்து படையெடுப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் கலாச்சார அடக்குமுறைகளால் பாதிக்கப்படுகிறது. நாட்டின் பிற பகுதிகளை விட வளர்ச்சியடையாதது பற்றிய புரிதல்கள் நிலையான சமூக அரசியல் போர்களுக்கு மற்றொரு காரணம். அசாமில் அமைதியை மீட்டெடுப்பது குறித்து மத்திய அரசு நம்பிக்கையுடன் இருந்தாலும்நாத்-யோகி சமூகம் எஸ்.டி வகைப்படுத்தலுக்கான புதிய கோரிக்கையைத் தொடங்கியது. இதற்கிடையில்மற்றொரு பழங்குடி பழங்குடியினர் கரோஸ் அவர்களின் உரிமைகளுக்காக ஒரு தனி தன்னாட்சி குழுவைக் கோரினர். போடோஸ் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பல குழுக்கள் மிரண்டு போயுள்ளன. அனைவருக்கும் அமைதியை மீட்டெடுக்க மதிய அரசு ஒரு இணக்கமான தீர்வை அடைய வேண்டும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.