2021ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பாஜக கடுமையாக உழைத்துவருவதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறினார். மேலும் அங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான அனைத்து இந்திய திரிணாமூல் காங்கிரஸ் அரசை தோற்கடித்து ஆட்சியை பிடிப்பதாகவும் கூறினார்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் மேற்கு வங்கம் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தங்களுக்கு மக்கள் ஐந்து ஆண்டு கால அவகாசம் கொடுத்தால் அனைத்து வழிகளிலும் மாநிலத்தை முன்னேற்றுவதாக உறுதியளித்திருந்தார்.
இதையும் படிங்க... 'விவசாயிகள், ஏழைகள், சமூகத்தில் சுரண்டப்படுபவர்களுக்கான அரசு பாஜகதான்!'