கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பலர் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1 ஆம் தேதி முதல் ரெயில்வே அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
இந்த ரெயில்கள் இயக்கப்படுவதற்கு முன்னரே ஏராளமான தொழிலாளர்கள், குடும்பம் குடும்பமாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்ல தொடங்கினார்கள். இப்படி சென்ற தொழிலாளர்களில் பலர் விபத்துகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
இதைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் அவலம் குறித்து வருத்தம் தெரிவித்த நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் தங்களது சொந்த வீடு செல்ல நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம் மேலும் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலார்களும் பத்திரமாக வீடு சென்று சேரும்வரை நாங்கள் கடுமையாக உழைத்துக்கொண்டே இருப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புதிய மின் நிலையம் அமைக்க ஒப்புதல்... கௌதம் அதானியின் கரோனா கால திட்டம்!