டெல்லியில் அம்மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 'டெல்லியில் தோல்வியடைந்த ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகள் குறித்து, தாம் பத்து கேள்விகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்கவுள்ளதாகவும் அதற்கான பதில்களை கூடிய விரைவில் கெஜ்ரிவால் கூறுவார்' என்று நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மக்களிடம் தம் அரசு நிகழ்த்திய சாதனைப் பற்றி பேச கெஜ்ரிவாலுக்கு ஒன்றுமில்லை. அதனால்தான் காற்றுமாசு, சாலை சீர்கேடு, மோசமான அரசுப் போக்குவரத்து பேருந்துகள் ஆகியவற்றை குறித்து வெகு ஜனமக்கள் கேட்கும் கேள்விகளிலிருந்து கெஜ்ரிவால் நழுவுவதாக மனோஜ் திவாரி குற்றம்சாட்டினார்.
மேலும் டெல்லி மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 20 ஆயிரம் கோடி நிதியை, ஏன் கடந்த ஐந்தாண்டுகளில் கெஜ்ரிவால் அரசு வழங்கவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்க: நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!