ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் கரடி தாக்கியதில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கொரியா பகுதியில் வசிக்கும் கிராமவாசிகள் சிலர், வன விளைபொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கரடி, கிராமவாசிகளை திடீரென தாக்க தொடங்கியுள்ளது.
அதில், ஒருவர் மரத்தின் மீது ஏறி தப்பித்துக்கொண்டார். இந்தத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மறைந்திருக்கும் கரடியை தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, கரடியை கண்டுபிடிக்க ட்ரோன் கேமராக்கள் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.