மே மாதம் கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளுக்குள் சீனத் துருப்புக்கள் அத்துமீறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்தான செய்தியை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியை மேற்கோள் காட்டி, 'பிரதமர் ஏன் இந்த விவகாரத்தில் பொய் சொல்கிறார்?' என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக சீனப்படைகள் தாக்கி, 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது முதல் ராகுல் காந்தி இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்.
-
Why is the PM lying?https://t.co/sEAcOTsZsY
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Why is the PM lying?https://t.co/sEAcOTsZsY
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2020Why is the PM lying?https://t.co/sEAcOTsZsY
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2020
இதற்கிடையில், பாங்கோங் ஷோ, கோக்ரா, குங்ராங் நாலா உள்ளிட்ட கிழக்கு லடாக்கின் பகுதிகளுக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.
இது குறித்து பாதுகாப்புத்துறை ஆவணத்தில் கூறியுள்ளதாவது, 'எல்லையில் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் சீனா கடந்த மே 5ஆம் தேதி முதல் ஆக்கிரமிப்பு செய்து வந்தது. பின்னர் மே 17, 18அன்று குக்ராங் நாலா, கோக்ரா, பாங்காங் ஷோ ஏரியின் வடக்குக் கரையோரங்களில் சீனப்படைகள் அத்துமீறியது' எனக் குறிப்பிட்டுள்ளது.
சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறியது குறித்து முதல் முறையாக ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் துறை அமைச்சகம் வாய் திறந்துள்ளது. இந்த ஆவணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம், அதன் அதிகாரப்பூர்வமான வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க...'கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவியது' - ஒப்புக்கொண்ட இந்தியா