ETV Bharat / bharat

மோடி பிரதமரான பின்பு இருதரப்பு உறவுகள் மோசமடைந்தது ஏன்? அசோக் கெலாட் கேள்வி - இந்தியா சீனா மோதல்

ஜெய்ப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கேள்வியெழுப்பி உள்ளார்.

Rajasthan CM Rajasthan CM on modi Chief Minister Ashok Gehlot violent face-off PM Modi came to power SpeakUpForOurJawans அசோக் கெலாட் இரு தரப்பு உறவுகள் இந்தியா சீனா மோதல் காங்கிரஸ்

author img

By

Published : Jun 27, 2020, 7:18 AM IST

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ட்விட்டரில் #SpeakUpForOurJawans என்ற ஹேஸ்டேக்குடன் காணொலி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் இரு தரப்பு கொள்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளது என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “லடாக் எல்லையில் இந்தியா-சீனா நிலைமை குறித்து இன்னமும் தெளிவு இல்லை. அங்கு நடந்துள்ள கொடூர வன்முறையில் 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்துள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் நமது அண்டை நாடுகளுடனான உறவு மோசமடைவதற்கு என்ன காரணம்? நரேந்திர மோடி பிரதமரான போது, வெளிநாட்டு தலைவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களும் வந்தார்கள். ஆனால் அதன்பின்னர் என்ன நடந்தது?

அவர்கள் இந்தியாவுக்கு எதிராக திரும்பியதற்கான காரணம் என்ன? சீன விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

மோடி பிரதமரான பின்பு இருதரப்பு உறவுகள் மோசமடைந்தது ஏன்? அசோக் கெலாட் கேள்வி

இந்த விஷயத்தில் அரசாங்கத்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்தியாவில் சீனாவுக்கு எதிராக அதிருப்தி உள்ளது. இன்று இல்லையென்றால், நாளை பிரதமர் உண்மையைச் சொல்ல வேண்டியிருக்கும். மறைப்பது ஒருபோதும் பலனளிக்காது. உண்மை இப்படியிருக்க, அரசு எதை மறைக்க விரும்புகிறது.

1962 இந்தியா-சீனா போருக்குப் பின்னர் அரசுகள் மேற்கொண்ட பணிகளின் விளைவாக இந்தியா இன்று ஒரு வல்லரசைக் காட்டிலும் குறைவான அதிகாரம் கொண்ட நாடாக இல்லை” என்றார்.

மேலும், “சமூக ஊடகங்கள் வாயிலாக காங்கிரசுக்கு எதிராக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: குஜராத்தில் பாகிஸ்தானியர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.