ETV Bharat / bharat

பாஜகவுடனான கூட்டணியை அகாலி தளம் முறித்துக் கொண்டது ஏன்?

சர்சைக்குரிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிரோன்மணி அகாலி தளம் வெளியே வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கட்டுரையில் ஈடிவி பாரத் மண்டல ஆசிரியர் பரஜ் மோகன் சிங், அகாலி தளம் - பிஜேபி இடையேயான பழைய உறவு குறித்தும், பழைய கூட்டணியில் இருந்து அகாலி தளம் ஏன் வெளியேறியது என்பது குறித்தும் விவரிக்கிறார்.

Akali Dal
Akali Dal
author img

By

Published : Sep 29, 2020, 4:51 PM IST

ஐதராபாத் : தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பழைய மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலிதளம், முக்கியமான வேளாண் மசோதாக்கள் குறித்து தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறது. இந்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறையின் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், பஞ்சாப்பில் போராடி வரும் விவசாயிகளை திருப்திப்படுத்த இது போதுமானதாக இல்லை.

பஞ்சாப் ஆளும் அரசியலில் உள்ள காங்கிரஸ் கட்சி, ”ஹா்சிம்ரத்தின் ராஜினாமா எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், வேளாண் துறையின் நலன்களை பாதுகாக்கும் நோக்கம் அதில் அல்ல” என்று குற்றம்சாட்டி உள்ளது.

விவசாயிகளின் அனைத்து நலன்களையும் குறித்து உண்மையிலேயே அக்கறை இருந்தால் கூட்டணியில் இருந்து அகாலி தளம் வெளியேறுமா என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங், ஆம் ஆத்மி கட்சி ஆகியவை அகாலிதளம் கட்சிக்கு சவால் விடும் வகையில் அழுத்தங்கள் கொடுத்து வருகின்றன.

அரசியல் விவகாரங்களுக்கான குழுவில் நாள் முழுவதும் விவாதித்த பின்னர் அகாலிதளம் இறுதி முடிவை எடுத்தது. அதன்படி அவர்கள் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து வெளியேறினர். பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டனர். 1997ஆம் ஆண்டு பிஜேபியின் விசுவாசமான தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இடையே உறுதியான கூட்டணி பிணைப்பு தொடங்கியது.

பஞ்சாப்பில் அதிகபட்ச சில்லறை விலை விவகாரம்

நாடாளுமன்றத்தில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியபோது, பஞ்சாப்பில் உள்ள விவசாயிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை எந்த அள‍வுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணரவில்லை.

பஞ்சாப்பில் நல்ல அறுவடை என்பது, நல்ல அரசியல் ஈவுத்தொகையை உறுதி செய்கிறது. அந்த வழியில் தேர்தல் ஆதாயம் என்பது, நல்ல வேளாண் உற்பத்திக்கான நேரடியான விகிதாச்சாரமாகக் கருதப்படுகிறது. தங்களின் விளை பொருள்களுக்கு அதிகபட்ச விற்பனை விலை கிடைப்பதை உறுதி செய்யும் ஆளுங்கட்சிக்கு எப்போதுமே அவர்கள் தேர்தல் வெற்றியை பரிசாகக் கொடுப்பார்கள்.

நாட்டிலேயே பஞ்சாப்பில்தான் சிறந்த மண்டி நடைமுறை அமலில் உள்ளது. அங்கே கிராமங்களில் உள்ள சாலைகள் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

1939ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலம் இருந்தபோதே விவசாய உற்பத்தியை சந்தைப்படுத்தும் பணிகள் தொடங்கி விட்டன, சர் சோட்டு ராம் வளர்ச்சி அமைச்சராக இருந்தபோதே ஏபிஎம்சி சட்டத்தை நிறைவேற்றி, சந்தைக் கமிட்டிகள் அமைக்க வழிவகுத்தார்.

1960 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் தலைவர்கள் மூலதனமும் தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்த விவசாயம் தேவை என்று உணரத் தொடங்கினர். அதிக மகசூல் தரும் விளைபொருள்களை உத்தரவாதத்துடன் முன்னெடுப்பதற்கான தருணம் தேவை என்றும் உணரத் தொடங்கினர். அதிகபட்ச விற்பனை விலை என்பது பஞ்சாப்புக்குப் புதிதான ஒன்று அல்ல. கோதுமைக்கான அதிகபட்ச விற்பனை விலை முதன்முதலாக 1966-67இல் ஒரு குவிண்டாலுக்கு 54 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இது அடுத்த ஆண்டில் 70 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

அரசியல் கட்சிகளுக்கு விவசாயத்துறை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதிகபட்ச விற்பனை விலை திடீரென ரத்து செய்யப்படுவதற்கு எதிராக விவசாயிகள் ஆயுதம் ஏந்தியிருக்கின்றனர். இந்தத் தருணத்தில் அகாலிதளம், விவசாயிகளின் நன்மதிப்பைப் பெற வேண்டி இருக்கிறது.

(அதிகபட்ச விற்பனை விலையை அகற்ற விரும்பவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது) பஞ்சாப்பில் 65 சதவிகித மக்கள், நேரடியாக வேளாண் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் புறக்கணிப்பது என்பது நிச்சயம் எளிமையான செயல் அல்ல.

விவசாயிகளைக் கவரும் வகையில் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார மானியத்தைக் கொடுத்து வருகிறது. இந்த விவகாரம் உணர்வுப்பூர்வமான அரசியல் சம்பந்தப்பட்டது என்பதால் எந்த ஒரு கட்சியும் இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யும் முடிவை ஆதரிக்காது. இப்போது விவாயிகளுக்கு எதிரான மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஏன் போராடுகின்றன என்பதை புரிந்து கொள்வதில் கஷ்டமிருக்காது.

பிஏசி கூட்டம் முடிவடைந்த பின்னர் பேசிய அகாலிதளம் தலைவர்கள் ”பிஜேபிக்குள் இருந்தபோது மெல்ல மெல்ல இறந்து வரும் ஜனநாயகத்தால் தாங்கள் காயப்பட்டோம். முக்கியமான முடிவுகளில் எங்களுடைய ஆலோசனைகளை அவர்கள் கேட்கவில்லை. அதிகபட்ச விற்பனை விலையை வேளாண்மையில் இருந்து திரும்பப்பெற்று விட்டால், வேளாண் விளைபொருள்கள் சந்தை கமிட்டிகள் முழுவதுமாக கலைக்கப்பட்டுவிடும்” என்று கூறினர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் சிங் பாதல் இது குறித்து கூறுகையில், அமைச்சரவைக் கூட்டத்தின்போது வேளாண் அவசரக் சட்டங்கள் குறித்து தம்மிடம் ஆலோசனை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அகாலி-பாஜக கூட்டணி

மூத்த அகாலிதளம் தலைவர் பேராசிரியர் பிரேம் சந்த் சந்தும்மஜுரா கூறுகையில், பிஜேபியை எந்த ஒரு கட்சியும் தீண்டாதபோது, அகாலிதளம் அவர்களை ஆதரித்தது. மத்திய அரசில் பிஜேபி ஒரு மூத்த சகோதரராகக் கருதப்பட்டது. பஞ்சாப்பில் அகாலிதளம் இளம் சகோதரராகக் செயல்பட்டது. பிரகாஷ் சிங் பாதல்தான் கூட்டணியின் உண்மையான பாதுகாவலர் என்றார்.

பிஜேபி - அகாலிதளம் கூட்டணிக்குள் சிக்கல்கள் என்று வந்து விட்டால், அதனைத் தீர்ப்பதில் அவரது வார்த்தைகள்தான் இறுதியானது என்றும் கூறினார். பஞ்சாப்பைப் பொறுத்தவரை பிஜேபி சிறப்பாக செயல்பட்டபோது அதிகாரம் அகாலிகளுக்கு ஆதரவாக இருந்தது. கூட்டணியில் இருக்கும் ஜூனியர் பங்குதாரர் அதிர்ஷ்டசாலிதான். கடந்த 22 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் சேர்ந்தே பயணித்து மூழ்கினர்.

2017ஆம் ஆண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில்தான் மோசமான நிலை ஏற்பட்டது. அப்போது சிரோன்மணி அகாலிதளம் அதுவரை இல்லாதவகையில் குறைந்த ஓட்டுகளைப் பெற்றது. ஆம் ஆத்மி கட்சியை விடவும் குறைவான எண்ணிக்கையில் அதாவது 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அகாலிதளம் கட்சியின் பத்தாண்டு கால ஆட்சியில், கூட்டணி ஆட்சிக்கு எதிராக பல ஊழல் குற்றசாட்டுகள் எழுந்தன.

அகாலி தலைவர்கள் போதை மருந்து கும்பலுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தனர் என்று குற்றசாட்டு எழுந்தது. இது பின்னர் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் முன்னணி அகாலி தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இது மாநிலத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்கவில்லை. இது செல்வாக்கு மிக்க ஜாட் விவசாயிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அதன் நம்பிக்கை சீக்கிய அரசியலிலும் ஆழமாகப் பதிந்துள்ளது.

அகாலிதளம் கட்சிக்கு சீக்கிய ஓட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2015ஆம் ஆண்டு அக்டோபரிலில் ஸ்ரீகுரு கிரந்த் சாஹிப் அவமதிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய சீக்கிய பக்தர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், சீக்கிய நம்பிக்கையின் பாதுகாவலர் என்ற அகாலியின் மீதான் நம்பிக்கை பொய்த்தது.

குரு கிராந் சாஹிப்பை அவமதிப்பவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்துக்கு 2015ஆம் ஆண்டு நம்பர் 20ஆம் தேதி பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பஞ்சாப்பின் அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கி வந்தவர்கள், அப்போதில் இருந்து அகாலியின் அரசியல் களத்தில் சரிவு ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொள்வார்கள். பல்வேறு சீக்கியத் தலைவர்கள் அகாலி தளத்தில் இருந்து வெளியேறினர். ஒரு புதிய ஒருங்கிணைப்பை உருவாக்கினர். பாதல் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்கு எதிராக நேரடியாக சவால் விடுத்தனர்.

சீக்கிய ஆதரவு களத்தில் இருந்த பழைமைவாதிகள் ஆதாயம் பெற்றுவந்தனர். ஆனால், 2015ஆம் ஆண்டில் இருந்து கிராமப்பகுதிகளில் அகாலி தலைவர்களுக்கான ஆதரவு என்பது குறைய ஆரம்பித்தது.

பஞ்சாப்பின் மால்வா பகுதியை (65 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட பகுதி) அகாலி தளம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி கட்டுப்பாட்டை இழந்து விட்டது.

சீக்கியத் தலைவர்களைத் திரட்டுவதில் வெளிநாட்டு வாழ் சீக்கியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அகாலிதளம் தொடர்ந்து எஸ்ஜிபிசியை (சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி, நாடு முழுவதும் உள்ள குருத்வாராக்களை செயல்படுத்துதல் மற்றும் நிர்வகிக்கும் அமைப்பு) தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததற்கு அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பிரச்னையின்போது, அகாலிதளம் குருத்வாரா அரசியலுக்குள் திரும்ப வந்தது. அகாலிதளம் தலைவர் சுக்பீர் பாதல் மீண்டும் குருத்வாரா அரசியலைக் கையில் எடுத்ததில் எந்த ஒரு வியப்பும் இல்லை.

பஞ்சாப் அரசியலில் விவசாயிகள்தான் முதுகெலும்பாக இருக்கின்றனர். எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அகாலிதளம் தொடர்ந்து நீடிப்பது சாத்தியமற்றதாகிவிட்டது. ஆனால், இது நிச்சயமாக தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் முயற்சியின் முதல்படி என்று சொல்லலாம். அதே நேரத்தில் இது அகாலிதளத்துக்கு அதிர்ஷ்டத்தை மீட்டுத்தருவதை உறுதி செய்யுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.