சிவசேனா நிறுவனத் தலைவர் பால சாகேப் தாக்கரே (பால் தாக்கரே) ஜனநாயகம் மீது பெரும்பாலும் நம்பிக்கையற்றவர். அவரின் பேச்சில்கூட அதனை அடிக்கடி காணலாம். வெவ்வேறு சம்பவங்களில் அண்ணல் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு குறித்து இகழ்ந்துள்ளார்.
தீவிர இந்துத்துவாவை கையிலெடுத்த பால் தாக்கரே
சிவசேனாவின் முழக்கம், 'மராட்டியம் மராத்தியர்களுக்கே' என்பதாகும். இந்தப் பயணத்தில் அதிதீவிரமாக செயல்பட்ட பால் தாக்கரே, 1980 காலகட்டங்களில் தீவிர இந்துத்துவாவை கையிலெடுத்தார்.
கொள்கையின் பால் ஈர்ப்பால் பால் தாக்கரேவும் பா.ஜனதாவும் இணைந்து செயல்பட ஆரம்பித்தன. தேசியவாத காங்கிரசும் காங்கிரசும் சிவசேனாவுக்கு எதிர் வரிசையில் கைகோர்த்தன. காங்கிரஸ் தலைவர்கள் பலர் மீது தாக்கரே கடுஞ்சொற்களை வீசினார்.
சோனியா காந்தியை இத்தாலி நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு பெண்மணி என்றும் அவர் அடிக்கடி உச்சரிப்பதுண்டு. சோனியா காந்தியின் பிரதமர் ஆசைக்கு கடும் எதிர்ப்புக் கொடி காட்டியவர்களில் பிரதானமானவர் பால்தாக்கரேதான்.
இதையும் படிங்க: சிவாஜி பூங்காவில் பதவியேற்பார் ஆதித்யா தாக்கரே...! - நம்பிக்கையில் சிவசேனா
வசந்த சேனாவாக உருவான சிவசேனா
சிவசேனாவின் மராத்தி மராத்தியர்களுக்கே என்ற முழக்கம் மற்ற மாநில மக்களை பாதித்தது. குறிப்பாக வட மற்றும் தென்னிந்திய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல், 1993ஆம் ஆண்டு கலவரம் உள்ளிட்ட சம்பவங்கள் சிவசேனாவையும் காங்கிரஸையும் எதிரெதிர் துருவங்கள் ஆக்கின.
ஆனாலும் சில முரண்பாடான சம்பவங்களும் அறங்கேறின. பால் தாக்கரே அனைத்து கட்சித் தலைவர்களுடன் நல்லுறவை கொண்டிருந்தார். அதில் சில காங்கிரஸ் தலைவர்களும் அடக்கம். 1966ஆம் ஆண்டு சிவசேனா உருவானபோது, அதனை 'வசந்த சேனா' என்றார்கள்.
தேர்தல்களில் எதிரொலித்த சிவசேனாவின் வளர்ச்சி
அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் வசந்தராவ் நாயக்கிடம் அவர்கள் கொண்டிருந்த நல்லுறவின் அடிப்படையில் இவ்வாறு அக்கட்சி அழைக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனாவின் வளர்ச்சி அபரிமிதமானது. அது 1989ஆம் ஆண்டு தேர்தல்களிலும் எதிரொலித்தது.
2000ஆவது ஆண்டுகளில் சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), விலாஸ்ராவ் தேஷ்முக் (காங்கிரஸ்), சுஷில்குமார் ஷிண்டே (பாஜக) உள்ளிட்ட தலைவர்களுடன் விருந்தோம்பலைத் தொடர்ந்தார்.
பிரதிபா பாட்டீலை ஆதரித்த சிவசேனா
இதற்கிடையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரசின் பிரதிபா பாட்டீலை சிவசேனா ஆதரித்தது. சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலேவுக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனவும் முடிவுசெய்தது.
காங்கிரஸ் தலைவர் முரளி தியோரா, சிவசேனாவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஹிட்லரின் நிலைமை தெரியுமா? பா.ஜ.கவுக்கு சிவசேனா கேள்வி
ஜனநாயகத்தில் அனைவருக்கும் இடமுண்டு
ஆனால் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இதுபோன்ற பொதுவான சூழ்நிலையும் ஏற்பட்டதில்லை. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற பாஜகவின் முழக்கத்தை சிவசேனா ஒருபோதும் கையிலெடுத்தது இல்லை. ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே (பால்தாக்கரேவின் மகன்) பலமுறை பதிவிட்டுள்ளார். இதைத்தான் நீண்டகாலமாக காங்கிரசும் கூறிவருகிறது.
1985ஆம் ஆண்டில் சிவசேனா, பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஒரு விசாரணையைகூட ஏற்படுத்தவில்லை. அவர்களை வழக்குகளால் துன்புறுத்தவில்லை. சிவசேனாவுடன் ஒப்பிடும்போது பாஜகவின் செயல்பாட்டு பாணி மற்றும் அரசியல் நோக்கங்கள் வெளிப்படையாக வேறுபட்டவை.
வாசிக்க சிவசேனாவுடன் காங்கிரஸ் கூட்டணி? உத்தவ் தாக்கரே- சரத் பவார் சந்திப்பு!
பாஜகவை சிவசேனா வெறுக்க காரணம்?
ஆனால் பாஜகவுடன் ஒப்பிடும்போது சில வலுவான பொதுக்காரணங்கள் இருகட்சிக்கும் ஒத்துப்போகும். பாஜகவை சிவசேனா வெறுக்க காரணம், கடந்த பத்து ஆண்டுகளில் தனது இடத்தை அக்கட்சி ஆக்கிரமித்துவிட்டது என்பதே. கடந்த ஐந்து ஆண்டுகளில் புனே, நாக்பூர், நாசிக் உள்ளிட்ட பெரும்பான்மை நகராட்சிகளில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது. உண்மையைச் சொல்லப்போனால், மும்பையிலிருந்து சிவசேனாவை வெளியேற்றிவிட்டது.
இதன் காரணமாகவே, இந்தத் தேர்தலில் 164 தொகுதிகளை பாஜகவுக்கு விட்டுக்கொடுத்து 124 தொகுதிகளில் சிவசேனா களமிறங்கியது. தற்போது கூட்டணியிலிருந்தும் வெளியேறிவிட்டது.
இதையும் படிங்க: மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா விலகல்: மகாராஷ்டிராவில் பரபரப்பு அரசியல் திருப்பம்