கோவிட் -19 பெருந்தொற்று நோய் உலகளாவிய அளவில் சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துவதற்கான அவசரத் தேவையை தெளிவுப்படுத்தியுள்ளது.
தி ஸ்டேட் ஆஃப் தி வேர்ல்ட்ஸ் நர்சிங் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, சுகாதாரப் பணியாளர்களின் மிகப்பெரிய அங்கத்தைப் பற்றி ஆழமாகப் விளக்குகிறது.
உலகம் முழுவதும் செவிலியர் படிப்பில் முதலீடு செய்வதற்கான முன்னுரிமை வழங்கவும், நர்சிங் கல்வியை வலுப்படுத்தவும், வேலை வாய்ப்பு, பணியாளர்கள் போன்றவற்றில் உள்ள இடைவெளியை இந்த அமைப்பு அடையாளம் காண்கிறது.
உலக சுகாதார ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் செவிலியர்கள். இவர்கள் சுகாதார அமைப்பில் முக்கிய சேவைகளை செய்கிறார்கள். காலம் காலமாக உலகில் அச்சுறுத்தும் நோய்கள் பரவும்போதும், பெருந்தொற்று நோய்களை எதிர்த்துப்போராடுவதிலும் செவிலியர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உலகெங்கிலும் கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதில் செவிலியர்கள் இரக்கத்துடனும், தைரியத்துடனும், துணிச்சலுடனும் செயல்பட்டுவருகின்றனர். இதற்குமுன் இவர்களது முக்கியத்துவம் இந்த அளவுக்கு நிரூபிக்கப்படவில்லை. அனைத்து சுகாதாரப் பணிகளிலும் செவிலியர்கள் முதுகெலும்பாக உள்ளனர்.
அந்த வகையில் இன்று ஏராளமான செவிலியர்கள் கோவிட்-19க்கு எதிராக போராடுவதில் முன்னின்று செயல்படுகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் மருத்துவர் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
இது செவிலியர்களின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதற்கும் உலகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்குமான அழைப்பு.
உலக சுகாதார அமைப்பு சர்வதேச செவிலியர் கவுன்சில் (ஐ.சி.என்) மற்றும் நர்சிங் நவ் ஆகியவற்றின் கணக்கீடு தகவல்கள் வாயிலாக, இன்று உலகளவில் 28 மில்லியனுக்கும் குறைவான செவிலியர்கள் மட்டுமே உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில் செவிலியர்களின் எண்ணிக்கை 4.7 மில்லியன் அதிகரித்துள்ளது. இருப்பினும் 5.9 மில்லியன் அளவில் பற்றாக்குறையாகவே உள்ளது.
குறிப்பாக ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளில் மிகப்பெரிய இடைவெளியைக் கொண்டுள்ளது.
உலக செவிலியர்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் உள்ள நாடுகளில் பணியாற்றுகிறார்கள். ஒவ்வொரு எட்டு செவிலியர்களில் ஒருவர் தாங்கள் பிறந்த நாட்டையோ அல்லது பயிற்சி பெற்ற இடத்தையோவிட்டு வேறு ஒரு நாட்டில் பயிற்சி பெறுகிறார்கள்.
செவிலி பணியில் வயதும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. உலகின் ஆறு செவிலியர்களில் ஒருவர் அடுத்த 10 ஆண்டுகளில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகலாவிய அளவில் இந்த பற்றாக்குறையை தவிர்க்க, செவிலியர் பட்டம் படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு சராசரியாக 8 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும். அவர்கள் உலக சுகாதார அமைப்பில் பணியமர்த்தப்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.