உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் தகவல் பரிமாற்றத்திற்கு சமூக வலைதங்களை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இப்போது அரசு நிறுவனங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப்பையே பயன்படுத்துகின்றனர். ஆடியோ, வீடியோக்களை பறிமாற்றிக் கொள்வதற்கு இது பேருதவியாக உள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப்பை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சிப்பதாகவும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள பயன்பட்டாளர்கள் உடனடியாக புதிய வாட்ஸ்அப் வெர்சனை அப்டேட் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு அப்பேட் செய்யவில்லை என்றால் பயனாளர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் திருடப்படலாம் என்ற அதிர்ச்சிகரத் தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.