தனியார் வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுடன் சுலபமாகத் தொடர்பு கொள்ளவும், அவர்களுக்குச் சேவை புரியவும் வாட்ஸ்அப் சௌகரியமான தளமாக உள்ளது.
கோட்டாக் மஹிந்திரா வங்கிதான் நாட்டில் முதல்முறையாக வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையைத் தொடங்கியது. வாட்ஸ்அப் மூலம் இதுவரை அந்த வங்கி 20 லட்சம் வாடிக்கையாளர்களுக்குச் சேவை புரிந்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், அச்சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 98 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவர் தீபக் ஷர்மா பேசுகையில், "மற்ற டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களும் எங்களது வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இஎம்ஐ எப்போது செலுத்த வேண்டும், டிஜிட்டல் பரிவர்தனை ஆகியவை குறித்த ரிமைன்டர்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதே எங்கள் சேவையின் பிரதான நோக்கம்" என்றார்.
இந்த வரிசையில் எச்டிஎஃப்சி வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சேவை புரிந்து வருகிறது. புது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள், சேவைகளை விளக்குவது, பணப் பரிவர்த்தனை குறித்த தகவல்களை அனுப்புவது என அனைத்து வகையான சேவைகளையும் எச்டிஎஃப்சி வங்கி அளித்து வருகிறது.
பெரு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள, வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை பயன்படுத்துவதாக வாட்ஸ்அப் இந்தியா தலைவர் அபிஜித் போஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலை - காங்கிரஸ் வலியுறுத்தல்