சைபராபாத் காவல்துறையின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணான 9490617444ஐ வாட்ஸ்அப் முடக்கியுள்ளது. நவம்பர் 27ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கிற்குப் பின்னர் அதிகளவில் குறுந்தகவல்களை இந்த எண் பெற்றதால், இந்த எண் முடக்கப்பட்டுளதாக காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக 7901114100 எண் தற்காலிகமாக பயன்பாட்டில் இருக்கும் என்று தகவல் பகிரப்பட்டுள்ளது.
சைபராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனர் சைபராபாத் காவல்துறையின் வாட்ஸ்அப் எண் 9490617444ஐ அந்நிறுவனம் முடக்கியதாக நேற்று ட்வீட் செய்திருந்தார். மேலும் பொதுமக்களின் குறைகளை தற்காலிகமாகப் பதிவு செய்வதற்கு 7901114100 என்ற வாட்ஸ் அப் எண்ணை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை: டாக்டரை கைது செய்யக் கோரி போராட்டம்
சைபராபாத் காவல் வரம்பிலுள்ள, புறநகரான ஷம்ஷாபாத்தில் நான்கு இளைஞர்களால் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டச் சம்பவத்தைத் தொடர்ந்து அதிகளவில் குறுந்தகவல்கள் வந்ததால் நவம்பர் 27ஆம் தேதி வாட்ஸ்அப் எண்ணை செயலிழக்கச் செய்தது. தற்போது இந்த எண்னை மீட்கும் முயற்சியில் காவல் தலைமையகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.