ETV Bharat / bharat

நோய்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது... வாங்க தெரிந்து கொள்வோம்! - நாவல் கரோனா

நோய், அதன் காரணியாக உள்ள வைரஸ் ஆகியவற்றுக்கு பெயர்கள் எப்படி வைக்கப்படுகின்றது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

corona
corona
author img

By

Published : Apr 12, 2020, 12:05 PM IST

கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகிறது. இம்மாதிரியான சூழலில் நோய்களுக்குப் பெயர் எப்படி வைக்கிறார்கள் என்ற சந்தேகம் உங்கள் மனதில் எழலாம். வைரஸ்களுக்கும், நோய்களுக்கும் பெயர் வைப்பதற்கு சில வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. வைரஸ்களுக்கு மரபணு அமைப்பின் அடிப்படையில் வைரஸ்கள் வகைப் பிரித்தல் தொடர்பான சர்வதேச குழுப் பெயர் சூட்டுகிறது. அதேபோன்று, நோய்களுக்கு உலக சுகாதார அமைப்பு பெயர் வைக்கிறது.

நோயின் ஒற்றுமைகளைக் கண்டறிவதற்கு முன்பு கரோனா வைரஸ் நோய்க்கு, 2019 - nCoV என்ற தற்காலிகப் பெயர் சூட்டப்பட்டது. வைரஸ், நோயின் அதிகாரப்பூர்வப் பெயரை உலக சுகாதார அமைப்பு, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிட்டது. நோயின் பெயர் கோவிட் - 19 எனவும், அதன் விரிவாக்கம் கரோனா வைரஸ் நோய் எனவும், உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு, சீனாவின் வூஹான் மாகாணத்தில் நோய்ப் பரவ தொடங்கியதால், ஆண்டை குறிக்கும் வகையில் பெயரில் 19 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது. சார்ஸ் கரோனா வைரஸ் 2 என்ற வைரஸ்தான் இந்நோய்க்கு காரணியாக உள்ளது. எனவே, சாரஸ் - கோவிட் - 2 என்ற பெயர் இந்நோய்க்கு உள்ளது.

இந்தப் பெயரை பயன்படுத்தினால் சார்ஸ் நோய் குறித்த அச்ச உணர்வு, மக்களுக்கு ஏற்படும் என்ற காரணத்தால் கோவிட் - 19 என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு பயன்படுத்துகிறது. கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் நோய் ஆசியக் கண்டத்தை உலுக்கி எடுத்தது. கரோனா, நாவல் கரோனா, கரோனா வைரஸ் என பல பெயர்கள் பயன்படுத்தப்படுவதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.

இதனை 'சீன வைரஸ்' என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ட்ரம்பின் கருத்து இனவாதம் சார்ந்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. நோய் எங்கிருந்து பரவியதோ அந்த இடத்தைக் குறிப்பிட்டு பல நோய்களுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்பானிஷ் காய்ச்சல், ஸிகா, எபோலா போன்ற நோய்களின் பெயரை எடுத்துரைத்து வெள்ளை மாளிகை விளக்கமளித்தது. நாடு, இடம், மக்கள், விலங்கு ஆகியவற்றின் பெயர்களை நோய்களுடன் குறிப்பிடும்போது தவிர்க்க வேண்டும் என்ற வழிமுறையை உலக சுகாதார அமைப்பு 2015ஆம் ஆண்டு வகுத்தது.

இம்மாதிரியான பெயர்கள் வைப்பது குறிப்பிட்ட இனக்குழுவை சாடுவது போல் இருக்கும் என, உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்தது. எனவே, சீன வைரஸ், வூஹான் வைரஸ் என குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரேநாளில் 1,035 பேருக்கு கரோனா: ஏழாயிரத்தை கடந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.