மேற்குவங்கத்தின் முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேப் பட்டாச்சார்யாவுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்னையால் அவதிப்பட்ட இவருக்கு இன்று உடல்நிலை மிகவும் மோசமானதால், கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில் 2000ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த இவர், ஒரே தொகுதியில் 24 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆட்சி செய்த காலத்தில்தான் மேற்குவங்க மாநிலம் தொழில்துறையில் முன்னேற்றம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.