உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெண்களின் மேல் கட்டவிழ்க்கப்படும் வன்முறைகளைத் தடுக்க ஆண்டி ரோமியோ என்ற குழுவை உருவாக்கினார். ஆனால் இந்தக் குழு காதலர்களை தொந்தரவு செய்வதாக பல தரப்பு குற்றம்சாட்டியது.
முக்கியமாக இஸ்லாமியர்களை குறிவைத்து இந்தக் குழு செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட குழு, சிறுபான்மையினரை தொந்தரவு செய்வதால் இந்தக் குழுவை கலைக்க வேண்டும் என பல தரப்பு கூறியது. இதன்காரணமாக ஆண்டி ரோமியோ குழு கலைக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, ஆண்டி ரோமியோ குழுவை உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் தொடங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக இருப்பதால் அது வரவேற்கப்படுகிறது. அந்தக் குழுவை டெல்லியிலும் தொடங்க வேண்டும் என்பது என் கருத்து என தெரிவித்துள்ளார்.