ETV Bharat / bharat

'வெல்கம் பேக்' - சச்சின் பைலட்டை வரவேற்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

author img

By

Published : Aug 11, 2020, 12:22 PM IST

டெல்லி : ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சன் பைலட், ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினார். சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பியுள்ளதை அக்கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

Rajasthan political crisis
Rajasthan political crisis

மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த ஒரு மாதமாக சிக்கல் ஏற்பட்டிருந்தது. ராஜஸ்தான் துணை முதலைமைச்சர் சச்னின் பைலட் அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

அதைத் தொடர்ந்து சச்சின் பைலட் உள்ளிட்ட 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும், மறுபுறம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சச்சினை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், முக்கிய நகர்வாக சச்சின் பைலட் நேற்று (ஆக. 10) ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அரசியல் குழப்பத்திற்கு தீர்வு கண்டுபிடிக்கும் விதமாக அதிருப்தி தலைவரான சச்சின் பைலட்டின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து வந்த அரசியல் குழப்பம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பியுள்ளதை அக்கட்சியின் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "ராஜஸ்தான் காங்கிரஸில் நிலவிய அரசியல் குழப்பம் ராகுல் காந்தியின் தலையீடு மூலம் இணக்கமாக தீர்க்கப்படுள்ளது. இது காங்கிரஸ் கட்சியில் நிலவும் உறுதியான ஒற்றுமையையும், ஜனநாயகத்தை தோற்கடிக்கும் பாஜகவின் தீய முயற்சிக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருபோதும் இரையாக மாட்டார்கள் என்பதையுமே பிரதிபலிக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், "இறுதியாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் முயற்சிகள் மூலம் ராஜஸ்தான் காங்கிரஸின் சர்ச்சைகள் முடிவுக்கு வந்துள்ளதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது ராஜஸ்தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்ற வேண்டும்" என்று கூறினார்.

இதேபோல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, "வெல்கம் பேக் சச்சின்! ராஜஸ்தானில் ஆக்கப்பூர்வமான, சுவாரஸ்யமான கட்டம் காத்திருக்கிறது. ராகுல் காந்தியின் அணியில் அயராது உழைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: நானும் அவமானங்களை சந்தித்திருக்கிறேன் - ப. சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.