ETV Bharat / bharat

கேரள அரசின் கரோனா உதவி வலைதளம் மீண்டும் செயலுக்கு வந்தது !

திருவனந்தபுரம் : வெளிநாடுகளில் உள்ள கேரள மக்கள் நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு உதவும் வகையில் கேரள அரசால் வடிவமைக்கப்பட்ட வலைதளம் அதிகமான பதிவர்களின் உள்நுழைவால் சிறிது நேரம் தடைபட்டு மீண்டும் செயலுக்கு வந்தது.

Website for Non-Resident Keralites suffers temporary outage after rush of registrations
தடைபட்ட மீண்டும் செயலுக்கு வந்த கேரள அரசின் கரோனா உதவி வலைத்தளம்!
author img

By

Published : Apr 27, 2020, 3:48 PM IST

Updated : Apr 27, 2020, 4:10 PM IST

கரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக உலக அளவில் இடம்பெயர்ந்திருக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துக்கொள்ள மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், கேரள அரசு இதற்கு முன்னோடியாக ஒரு வலைதளத்தை நேற்று (ஏப்ரல் 26) தொடங்கியது. அதில், வெளிநாட்டிலிருந்து தமது தாயகம் திரும்ப விரும்பும் கேரளத்தவர்கள் அனைவரும் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தோருக்காக கேரள அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான நோர்கா-ரூட்ஸ் நிறுவனத்தின் www.norkaroots.org-இல் இதற்காக பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நோர்கா-ரூட்ஸ் வலைதளத்தின் இந்த சிறப்பு ஏற்பாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே நாடு திரும்ப அனுமதிக்கப்படுவர். நாடு திரும்புபவர்கள் அனைவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் கண்டறிதல் சோதனைக்குள்ளாக்கப்படுவார்கள். கோவிட்-19 அறிகுறிகள் இல்லாதவர்கள் வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். மற்றவர்கள் தற்போதைய மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு தெரிவித்திருந்தது.

இது குறித்து நோர்கா-ரூட்ஸ் அலுவலர்கள் கூறுகையில், “கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இடம்பெயர்ந்த கேரள மக்களுக்கு உதவும் இந்த வலைதளத்தை திறப்பதாக அறிவித்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதிலுமிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். வலைதளத்தில் ஒரே நேரத்தில் அதிகமான பதிவர்களின் உள்நுழைவு காரணமாக சிறிது நேரம் இணையத்தளத்தில் தடை ஏற்பட்டது. தற்போது மீண்டும் அது சரி செய்யப்பட்டு செயலுக்கு வந்துள்ளது” என்றனர்.

இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், "இந்த கடினமான காலங்களில், எங்கள் சகோதர சகோதரிகள் வீடு திரும்ப விரும்புவது மிகவும் இயல்பானது. அவர்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அதனால்தான் அவர்கள் பாதுகாப்பாக கேரளாவுக்குள் வருவதை உறுதி செய்யுமாறு நான் பிரதமரிடம் பலமுறை கேட்டுக்கொண்டேன். அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப எது தேவையோ அவை அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக பணியாற்ற தயாராக உள்ளன. கேரளாவில் உள்ள பல்வேறு விடுதிகள், உணவகங்கள், அரங்குகள், தங்குமிட வசதிகளுடன் கூடிய தனியார் மருத்துவமனைகள், ஆலப்புழாவில் மிதக்கும் படகு இல்லங்கள் இதற்காக பயன்படுத்தப்படும். இந்தக் கரோனா வைரஸ் பராமரிப்பு மையங்கள் பல இலவசமாக இயக்கப்படும்.

இடம்பெயர்ந்தோர் கேரளாவுக்கு திரும்பும்போது எழக்கூடிய எந்தவொரு தேவைகளையும் பூர்த்தி செய்ய அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகம் தயார் நிலையில் உள்ளன. அறிகுறிகள் தென்பட்டால் 2,50,000 கூடுதல் படுக்கைகள் கொண்ட சிறப்பு கோவிட் -19 மருத்துவமனைகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது” என கூறியுள்ளார்.

Website for Non-Resident Keralites suffers temporary outage after rush of registrations
தடைபட்ட மீண்டும் செயலுக்கு வந்த கேரள அரசின் கரோனா உதவி வலைத்தளம்!

கேரளத்தவர்களில் 90 விழுக்காடு பேர் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரித்து வருகின்றனர். 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் பேர் விமான சேவைகளின் மூலமாக நாடு திரும்ப வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க : ‘இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன’ - மத்திய அரசு

Last Updated : Apr 27, 2020, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.