புதுடெல்லி: கோவிட் -19 பரவல் காரணமாக, இந்தியாவிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் கல்வி தொடர்பான சவாலை ஏற்றுக் கொண்டுள்ளன. மார்ச் மாதத்தில் கரோனா பரவல் தொடக்கத்திலிருந்தபோது, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை செயல்படுத்தின. தொடக்கத்தில் இதில் குறைபாடுகள் இருந்தன, ஆனால் பின்னாள்களில் இது மிகவும் பலனளித்தது.
நாட்டில், ஒரு கோடியே ஒன்பது லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். மிகக் குறுகிய காலத்தில், அவர்கள் ஆன்லைன் கல்வி மாதிரியை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள கோடி மாணவர்களின் நலனுக்காக அதை முன்னெடுத்துச் சென்றனர்.
மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் சுமையாக இருந்த நேரத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் அரசு உயர் வகுப்புகளின் பாடத்திட்டத்தில் பொருத்தமான மாற்றங்களைச் செய்தது. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடன் இணைந்து, இந்தப் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இது மாணவர்களின் சுமையை குறைத்துவிட்டது. மேலும், அவர்களின் படிப்பை இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தொடர அவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.
இந்நிலையில் ஈடிவி பாரத் பிராந்திய செய்தி ஆசிரியர் பிராஜ் மோகனுடன், மத்திய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் (டாக்டர். நிஷாங்க்) அளித்த பிரத்யேக காணொலி பேட்டியில், “கரோனா வைரஸ் நோய்த்தொற்று நெருக்கடி நேரத்தில் இந்தியர்கள் முன்மாதிரியாக திகழ்ந்தனர்” என்றார்.
இதையடுத்து, “ஆன்லைன் கல்வி காரணமாக நமது பாரம்பரிய கற்பித்தல் முறைகளில் ஏதேனும் மாறுபாடு இருக்குமா என்று ஈடிவி பாரத் ஆசிரியர் டாக்டர் நிஷாங்கிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், “ஆன்லைன் கல்வியைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒன்றை நகர்த்தியபோது இது மிகவும் கடினமான நேரம். நாங்கள் அல்லது நீங்கள் அனைவரும் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. நாம் சவாலை ஏற்கவில்லை என்றால், முன்னேற முடியாது. இன்றும் நாம் ஒரு கடுமையான சவாலை எதிர்கொள்கிறோம், அங்கு கல்வியின் வெளிச்சம் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த கடினமான நாள்களில், மக்களின் பொருளாதார நிலை வேறு மோசமடைந்துள்ளது” என்றார்.
இதைத்தொடர்ந்து ஆன்லைன் கல்விக்கு நிதி பங்களிப்பு குறித்து பேசிய அவர், “இது சம்பந்தமாக, நாங்கள் நிதி அமைச்சகம், நிதி ஆயோக் ஆகியோருடன் பேசியுள்ளோம், இதனால் தேவையானவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கின்றன. டி.டி.எச் மூலம் ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்களை அடைவதே எங்கள் இலக்கு. மத்திய அரசின் குறிக்கோள் ‘ஒரு வகுப்பு, ஒரு சேனல்’, இதன் கீழ் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு சேனல் கிடைக்கிறது.
ஆன்லைன் கல்வியை தொலைதூர கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது. டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் உதவியை அரசாங்கம் நாடுகிறது.
ஆன்லைன் கல்வியை மிகவும் பயனுள்ளதாக்க, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஆன்லைன் கல்வி பாடத்திட்டத்தில் பணியாற்ற 100-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை அரசு ஒப்படைத்துள்ளது” என்றார்.
அடுத்து மாணவர்கள் சந்திக்கும் அறிவியல் சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசினார். அப்போது, “பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வித் தரத்தை உயர்த்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறோம்.
கல்வித்துறையில், இந்தியா ஒரு வல்லரசாக இருந்து வருகிறது. இந்த ஆண்டைப் பற்றி நாம் பேசினால், 50,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் தங்களது உயர் கல்விக்காக பதிவு செய்துள்ளனர். டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க கூகுள் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது” என்றுக் கூறினார்.
மேலும், “இந்தியர்கள் தங்கள் சொந்த பல்கலைக்கழகங்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஐ.ஐ.டி முன்னாள் மாணவர் சுந்தர் பிச்சை இன்று கூகுளின் தலைவர் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நமது சொந்த நிறுவனங்களை மதிக்க வேண்டும். அப்போதுதான் நாம் உலகிற்கு சவால் விடும் நிலையில் இருப்போம்” என்றும் மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் கூகுள் நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்கிறது என்று தெரியுமா?