சமீபத்தில் நடந்துமுடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெறும் எட்டு தொகுதிகளை மட்டுமே பாஜக வென்றுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷாம் ஜாஜூ ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்ப்பார்த்தது போல நடக்கவில்லை. இதுகுறித்து நாங்கள் ஆராய்வோம்.
மக்கள் எங்களை பாராட்டுகிறார்கள். முந்தைய தேர்தலை விட அதிக தொகுதிகளில் வென்றுள்ளோம். வாக்கு வங்கியும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தகுதி தராதரம் பார்க்காமல் கட்சிக்காக உழைப்பதே எங்களது கலாசாரம். மக்கள் எங்களுக்கு கொடுத்துள்ள பணிகளை தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்றார்.
இதையும் படிங்க : 'இந்தியாவில் இது புதுசு' - ஆம் ஆத்மி முன்வைக்கும் நவீன அரசியல் என்ன?