ETV Bharat / bharat

குடும்பங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பது ஆராயப்படும் - சிதம்பரம் - சிதம்பரம்

டெல்லி: மக்கள் தொகையில், பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ள 13 கோடி குடும்பங்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் என்ன கிடைக்கப்போகிறது என்பது ஆராயப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Chidambaram
Chidambaram
author img

By

Published : May 13, 2020, 11:51 AM IST

கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் தேக்கநிலை அடைந்து பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். நிலம், தொழிலாளர், பணப்புழக்கம், சட்டம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என மோடி தெரிவித்தார்.

சிறு தொழில், தொழிலாளி, விவசாயி, நடுத்தர வர்க்கத்தினர், குடிசை தொழில், வெளிமாநில தொழிலாளர்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் கூறினார். திட்டம் குறித்த முழு விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என தெரிவித்தார்.

மக்கள் தொகையில் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ள 13 கோடி குடும்பங்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் என்ன கிடைக்க போகிறது என்பது ஆராயப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  • We will also examine what the bottom half of the population (13 crore families) will get in terms of REAL MONEY.

    — P. Chidambaram (@PChidambaram_IN) May 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெற்று பக்கம் அடங்கிய தலைப்பு செய்தியை மோடி நேற்று அறிவித்தார். அதற்கு எனது எதிர்வினையும் வெறுமையாகவே உள்ளது. அந்த வெற்று பக்கத்தை நிதியமைச்சர் நிரப்புவார் என எதிர்பார்க்கிறேன். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் கவனமாக கணக்கில் கொள்ளப்படும்.

யாருக்கு என்ன கிடைக்கப்போகிறது என்பதை கவனமாக ஆராய்வோம். பட்டினியால் பெருமளவு பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தள்ளியுள்ள தங்கள் மாநிலத்துக்கு நடந்த சென்ற வெளிமாநில தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோருக்கு என்ன கிடைக்கப்போகிறது என்பதை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘ரூ. 20 லட்சம் கோடி மதிப்பில் புதிய திட்டம்’ - பொருளாதார வளர்ச்சிக்கு மோடி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.