கரோனா வைரஸ் நோய் இந்தியாவைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இந்நோயால், 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றிவருகின்றனர். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலர் லாவ் அகர்வால் கூறுகையில், "இம்மாதிரியான நடவடிக்கைகள் நோயை கட்டுப்படுத்த உதவியது. தொற்று நோய்க்கு எதிராக போராடி வருகிறோம். கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளை ஒப்பிட்டால், நாம் நல்ல நிலையிலேயே உள்ளோம். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கே இதற்கு காரணம்" என்றார்.
21 நாள்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "நிலைமையை பொறுத்தே அந்த முடிவு எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து நோயை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்
இதையும் படிங்க: கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய ஐ.ஐ.டி.!