உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாஜக நிறுவனர் தீனதயாள் உபாத்யாயாவின் சிலையை திறந்துவைத்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில், “ஜம்மு காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் கிடந்தன.
நாட்டின் தேசிய நலனை கருத்தில் கொண்டு இதனை நாங்கள் எடுத்தோம். நாங்கள் இவற்றில் உறுதியாக இருப்போம். பாஜக அரசாங்கம் தன்னம்பிக்கை மற்றும் சுயசேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. எங்களது அரசாங்கம் இலவச எரிவாயு, கழிப்பறை உள்ளிட்ட ஏராளமான திட்டத்தை ஏழைகளுக்காக நிறைவேற்றுகிறது. வாரணாசியில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி. இங்கு மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கிவைத்தார். இது மருத்துவம், கல்வி, சாலைகள், மேம்பாலம் மற்றும் குடிநீர் ஆகிய திட்டங்களை உள்ளடக்கியது.
இதையும் படிங்க : 'அது ஒரு கோரிக்கை திட்டம், தொடர்ந்து செயல்படுத்த விரும்புகிறோம்': நிர்மலா சீதாராமன்