கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், திருமலைப் பகுதியில் ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் கூட்டம் இல்லாததைப் பயன்படுத்தி, வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைப் பார்த்து, அப்பகுதி மக்கள் அச்சம் அடைகின்றனர்.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, சாலையை ஹாயாக சிறுத்தை நடந்து செல்லும் காணொலி சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது. இதே போல், நள்ளிரவில் சாலைகளில் பாம்புகள் ஊர்ந்து சென்றதாகவும் முன்பு பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலை பார்க்க சொன்ன உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவலர்