உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள ரபுபுரா பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி விற்பனை செய்பவர் லோகேஷ் (43). இவர் வழக்கம் போல் இன்று பிரியாணி விற்பனையை தொடங்கினார்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் எப்படி நீ இங்கு பிரியாணி கடை வைக்கலாம் என கேள்வி எழுப்பி அவரை தகாத வார்த்தைகளால் பேசியவாறே முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினரிடம் தெரிவித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து லோகேஷ் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை காவல் துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர்.
டிக் டாக் நட்பு... பெண்ணின் வாழ்க்கை பாதை மாறிய சோகம்!இதையும் படிங்க: