ETV Bharat / bharat

பிரியங்கா 'சோப்ரா' வாழ்க - ஷாக் கொடுத்த காங்கிரஸ் பிரமுகர்!

author img

By

Published : Dec 2, 2019, 12:01 PM IST

Updated : Dec 2, 2019, 12:29 PM IST

டெல்லி: பிரியங்கா காந்தியின் பெயரை முழங்குவதற்கு பதில் பிரியங்கா சோப்ரா என முழங்கிய காங்கிரஸ் பிரமுகரால் பொதுகூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Congress
Congress

காங்கிரஸ் கட்சி சார்பாக டெல்லியில் பொதுகூட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுரேந்திர குமார் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். கூட்டம் முடிந்து தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் போது, 'பிரியங்கா காந்தி வாழ்க' என முழங்குவதற்கு பதில் 'பிரியங்கா சோப்ரா வாழ்க' என முழங்கினார்.

இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், தன்னை திருத்தி கொண்ட அவர் மன்னிப்பு கேட்டார். இதனை ட்விட்டரில் விமர்சித்த அகாலிதள கட்சியின் எம்.எல்.ஏ. மஞ்ஜிந்தர் சிங், "காங்கிரஸ் கட்சியின் பொதுகூட்டங்களில் பிரியங்கா சோப்ரா வாழ்க என முழங்கப்படுகிறது. இதன்மூலம், கட்சியே பப்புவாகிவிட்டது" என பதிவிட்டிருந்தார். சுரேந்திர குமாரை பலர் ட்விட்டரில் கலாய்த்துவருகின்றனர்.

காங்கிரஸ் பொதுகூட்டம்

2017ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட சுரேந்திர குமார், ஆம் ஆத்மி கட்சியின் ராம் சந்தரிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒடிசாவில் தொடங்கியது சர்வதேச மணல் சிற்ப திருவிழா!

Intro:Body:

https://www.aninews.in/news/national/politics/cong-leader-mistakenly-cheers-for-priyanka-chopra-instead-of-priyanka-gandhi20191202024958/

https://twitter.com/ANI/status/1201212204269416453

Conclusion:
Last Updated : Dec 2, 2019, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.