ஹைதராபாத்: கோவிட்-19 தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உலகளாவிய மரபணு ஆய்வை மேற்கொள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.
செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினில் உள்ள மெக்டோனல் ஜீனோம் நிறுவனம் மற்றும் 30க்கும் மேற்பட்ட மரபணு ஆராய்ச்சிக் கூடங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
இதன் மூலம் மனிதனின் மூலக்கூறுகளில், கரோனா நோய்க் கிருமி எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது, எவ்வாறு அதன் வீரியத்தை தக்கவைத்து கொள்கிறது, எந்த முறையில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதனை அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"எங்கள் ஆய்வின் முதல் கவனம் SARS-CoV-2 நோய்த் தொற்றுக்கு கடுமையான எதிர்வினைகளை கொண்ட நோயாளிகளுக்காக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தீவிர சிகிச்சை மட்டும் தேவைப்படும் நோயாளிகளுக்கும், ஆரோக்கியமாக இருக்கும் 50 வயதிற்கு குறைவானவர்களின் மேல் அதிக கவனம் செலுத்தப்படும்" என்று வாத நோய் நிபுணர் மேகன் ஏ. கூப்பர் கூறியுள்ளார்.