ETV Bharat / bharat

'அரசியல் முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை'- சிபிஎம், காங்கிரஸ் இடையே உச்சக்கட்ட மோதல்! - வார்த்தைப் போர்

கேரள காங்கிரஸ் மூத்தத் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலாவிற்கும் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனுக்கும் இடையிலான வார்த்தைப் போர் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தாக்கி பேசும் அளவிற்கு உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.

War of words Ramesh Chennithala Kodiyeri Balakrishnan Kerala ரமேஷ் சென்னிதாலா கொடியேறி பாலகிருஷ்ணன் வார்த்தைப் போர் கேரளா

author img

By

Published : Aug 1, 2020, 2:22 PM IST

திருவனந்தபுரம் (கேரளா): காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவிற்கும் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனுக்கும் இடையே நடந்து வரும் தொடர்ச்சியான வார்த்தைப்போர் மோசமான நிலைக்குத் திரும்பியுள்ளது. இடதுசாரித் தலைவர் அவரை காங்கிரசுக்குள் உள்ள ஒரு இந்துத்துவவாதி என்று தெரிவித்தார்.

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையான தேசாபிமாணியின் தலையங்க கட்டுரையில், “தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பாலகிருஷ்ணன், எதிர்க்கட்சி தலைவர் சென்னிதலாவை "கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.சின் பையன்” என்று அழைத்துள்ளார்.
அந்தக் கட்டுரையில் சென்னிதலா ஆர்.எஸ்.எஸ். உடன் நெருக்கமாக உள்ளார். சென்னிதாலா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற இதுவே காரணம் எனக் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சென்னிதாலா, “எனது டி.என்.ஏ. மீது பாலகிருஷ்ணனுக்கு சந்தேகம் இருக்கலாம். ஆனால் வேறு யாருக்கும் சந்தேகமில்லை. மேலும், டி.என்.ஏ. கருத்து அவரை எரிச்சல் அடைய செய்திருக்கலாம். ஏனெனில் அவரது மகன் மீது மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் அவர்களுக்கு எட்டு வயதில் குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது எனக் கூறியுள்ளார். முன்னதாக பாஜக பத்திரிகையான ஜென்மபூமியில் ரமேஷ் சென்னிதாலா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் ராமச்சந்திரன் பிள்ளை ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்ததாக கருத்து தெரிவிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

ராமச்சந்திரன் பிள்ளை தனது 15ஆம் வயது வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்ததாகவும், அதன்பின்னர் அவர் அதிலிருந்து வெளியேறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கர்நாடக அமைச்சருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.