நாம் போர்க்களத்தில் இருக்கிறோம். கரோனா வைரசுக்கு எதிரான இந்தப் போரில் நாம் காண்பதை விவரிக்க இயலாது. எதிரி நம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் இந்தியா கடந்த காலங்களில் சந்தித்த எதிரிகளை விட இது மிக மோசமானது. இந்தப் போர் எத்தனை உயிர்களை பலி கேட்கும் என தெரியாது, ஆனால் இது நம் நல்வாழ்க்கையை, வாழ்வியல் முறையை, எதிர்காலத்தை கடுமையாக பாதித்துள்ளது.
இதற்கு முந்தைய போர்களில் உயிர் பலி என்பது இல்லாமல் இருந்தது. இப்போதைய சூழல் அப்படியில்லை, ஒவ்வொரு குடுமகனும் போர் வீரர்களாக மாற வேண்டிய தருணமிது. ஒரு குடிமகன் போர் வீரனாவது சாதாரண விஷயமல்ல, ஆனால் இந்த அனுபவம் நமக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கும்.
போர் நிகழும்போது காலாட்படை, பீரங்கிப்படை, மீட்புக்குழு உள்ளிட்டவை எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறதோ, அதேபோல் நாமும் தற்போது செயல்பட வேண்டும். ஒவ்வொரும் தன்னுடைய பணியை சரியாக செய்யவில்லை என்றால், இந்தப் போரில் நாம் தோல்வியை சந்திப்பது நிச்சயம்.
இந்தப் போரில் நமக்கு பாதுகாப்பான இடமென்று எதுவுமில்லை, இங்கு ஏழை பணக்காரர் வித்தியாசமில்லை. நமது மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், அவசர கால ஊழியர்கள் அனைவரும் கரோனா வைரசுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு குடிமனும் அவர்களது சுமையை எளிதாக்க ஒத்துழைக்க வேண்டும்.
தென்கொரியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நபரை ஜனவரி 20ஆம் தேதி கண்டறிந்தனர். அதற்கு 4 வாரங்களுக்கு பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30ஆக இருந்தது. ஆனால் 31ஆவதாக ஒரு பெண்மணி, பரிசோதனை செய்ய மறுத்து கரோனா பாதிப்புடன் சின்சேயான்ஜி தேவாலயத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். தொன்கொரியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60% பேருக்கு இந்தப் பெண்மணியால்தான் நோய்த் தொற்று பரவியது என கூறப்படுகிறது. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும், ஒரு நபர் தவறு செய்தால் கூட கரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்றுவிடுவோம்.
நமது போரை சரியான பாதையில் கொண்டு செல்ல கொடுக்கப்படும் கட்டளைகளை சரியாக பின்பற்ற வேண்டும். கீழ்படிதலே ராணுவத்தின் உச்சகட்ட நல்லொழுக்கம் என்கிறார் அரசியல் அறிஞர் சாமுவேல் ஹன்டிங்டன். உடனடி கீழ்ப்படிதல் இல்லை என்றால் போரிடுவது சாத்தியமல்ல, வெற்றிபெறும் வாய்ப்பும் குறைவு. கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் கட்டளைகளை முழுமையாக உள் வாங்க வேண்டும், அர்ப்பணிப்பு உணர்வு உறுதியாக இருக்க வேண்டும்.
இந்த நெருக்கடியான சூழலில் அரசியல் தலைவர்கள் எடுக்கும் முடிவு சரியா அல்லது தவறா என்பதை வரலாறுதான் முடிவு செய்யும், அதனை விவாதிக்க இது சரியான நேரம் அல்ல. அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்து நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு எதிரியை வீழ்த்த வேண்டும்.
எதிரியை சந்திக்கும் வரை நமக்கு எந்தத் திட்டமும் கிடையாது என ராணுவத்தில் கூறுவதுண்டு. ஆனால் எதிரியை சந்தித்த பின்பு சூழல் மாறிவிடும், போருக்கு மத்தியில் இருக்கும் வீரர்கள் ஒரு யோசனை தோன்றும், மற்ற வீரர்களுக்கு ஒரு யோசனை தோன்றும், ஆனால் அனைவரின் குறிக்கோளும் எதிரியை வீழ்த்துவது மட்டுமே.
கரோனா வைரசுக்கு எதிரான இந்தப் போரில் எதிர்பாராத சவால்கள் பலவற்றை நாம் சந்திக்க நேரிடும். எனவே நமது ஆரம்ப திட்டத்தை மாற்றி சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு உத்திகளை பயன்படுத்தி கரோனா பரவலை தடுக்க வேண்டும். நமது செயல்பாடுகள் எல்லாம் இதை நோக்கியே இருக்க வேண்டும்.
அரசாங்கத்தின் முழு ஆதரவும் நம் பக்கம் என்ற நம்பிக்கையில்தான் வீரர்கள் போரிடுகின்றனர். அரசுக்கும் போர் வீரர்களுக்கும் இடையே உள்ள எழுதப்படாத உடன்படிக்கைதான் பரஸ்பர கடமை. இதில் வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து செயல்பட வேண்டும். அரசாங்கம் வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதுடன் இழப்பீடும் வழங்க வேண்டும்.
இந்தப் போரில் நாம் அனைவரும் தியாகம் செய்ய வேண்டும். பதிலுக்கு அரசாங்கம் நமது சுமையை குறைக்க உறுதியுடன் வேண்டும். அத்தியாவசிய தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள், சுகாதார சேவை உள்ளிட்டவைகளை அரசாங்கம் கவனித்துக்கொள்ள வேண்டும்.
தேசிய அளவு முடக்கம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் கண்கூடாக தெரிகிறது. தினக்கூலி பணியாளர்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தொழில்துறை அடி வாங்கியிருப்பதால், வேலையில்லாத் திண்டாட்ட நிலை அதிகரித்துள்ளது. அரசாங்கம் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். ஏழை மக்கள் மற்றும் மூத்த குடிமக்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தொழில்துறையை காப்பதும் அரசின் கடமை ஆகும்.
சரியான போர்க் கருவிகளை கொண்ட ராணுவத்தை உடைய ஒரு நாடு, அதன் வீரர்கள் அபாயத்தை பொருட்படுத்தாது போரிடாமல் வெற்றி பெறாது. ‘உன் இன்றைய செயலை பொறுத்துதான் எதிர்காலம்’ எனும் மகாத்மா காந்தியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது என்கிறார்.
இதையும் படிங்க: கோவிட் 19: தனிமைப்படுத்துதலின் முக்கியத்துவமும் அவசியமும்!