ETV Bharat / bharat

‘அடுத்த பிறவியில் தமிழனாய் பிறக்கவே ஆசை’ - சமூகநீதியை சுவாசித்த பிரதமர் அவர்..! - kalaignar karunanidhi

அடுத்த பிறவி என ஒன்று இருக்குமேயானால், அதில் தமிழனாய் பிறக்கவே ஆசை என வடக்கில் இருந்து நேசம் வீசிய மறைந்த முன்னாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் பிறந்து இன்றுடன் 88 ஆண்டுகள் நிறைவடைகிறது.

vp singh
author img

By

Published : Jun 25, 2019, 4:11 PM IST

சுதந்திர இந்தியாவின் ஏழாவது பிரதமராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்ட இவரின் ஆட்சி நீடித்தது வெறும் 11 மாதங்கள் மட்டுமே. அந்த 11 மாதங்களில் இவர் சந்தித்த சவால்களும், அமல்படுத்திய திட்டங்களும்... பிரதமர் பொறுப்பிற்கு ஆசைப்படும் இன்றைய இளம் தலைவர்கள் பலருக்கும் பாடம்.

தையா மன்னர் பரம்பரையின் இளவரசராக பிறந்த ராஜா ஸ்ரீ விஸ்வநாத் பிரதாப் சிங், பின் நாட்களில் வி.பி. சிங் ஆனார். இளமைப் பருவம் முதலே ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்டவராய் வளர்ந்த இவர், 1948ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுவே இவரின் அரசியல் வாழ்க்கைக்கு தொடக்கமாக அமைந்தது.

இளம் வயதில் வி.பி.சிங்வி.பி.சிங்

அந்த காலக்கட்டத்தில் வட இந்தியாவின் அரசியல் ஆசானாக விளங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோசியலிச இயக்கம், வினோபாபாவின் காந்திய செயல்பாடுகள், லால்பகதூர் சாஸ்திரியின் நேர்மையான அரசியல் என வெவ்வேறு கருத்தியல்கள் கொண்ட மூன்றையும் இணைத்து தனக்கான அரசியல் பாதையை வகுத்தார் வி.பி. சிங். அந்த பாதை தான் சமூகநீதி.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது உத்தரப் பிரதேசத்தின் முக்கிய அரசியல் பிரமுகராக தன்னை வளர்த்துக்கொண்ட இவர், அவரது மறைவுக்குப் பின்னர் அமைந்த ராஜீவ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சரானார். அப்போது தான் பெரும் தொழிலதிபர்களின் வரி ஏய்ப்பே இந்திய கஜானா காலியாவதற்கு காரணம் என்ற அடிப்படையை கண்டறிந்து ஆட்டத்தை ஆரம்பித்தார்.

ராஜீவ் காந்தியுடன்...
ராஜீவ் காந்தியுடன்...

ரெய்டுகள் பறந்தன, அமிதாப் பச்சன் அலறவிடப்பட்டார்... திருபாய் அம்பானியின் சொத்துகள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. பெரும் தொழிலதிபர்களும், முக்கிய பிரமுகர்களும் மிரண்டார்கள். எவர் எவரின் நன்கொடைகளால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இயங்கி வந்தனவோ அவர்களின் அழுத்தத்தால் ராஜீவ் நெளிந்தார். அரசியல் சிக்கல்களை சமாளிக்க முடியாமல், வி.பி . சிங்கிடம் இருந்த நிதியமைச்சர் பதவியைப் பறித்து வேறு துறையை வழங்கினார். ஆனால், அதையும் வி.பி. சிங் விடுவதாய் இல்லை. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் வெடித்து, அமைச்சரவையில் இருந்து வி.பி. சிங் நீக்கப்பட்டார்.

அந்த ஆதங்கத்தோடு இவர் ஆரம்பித்த ஜன மோர்ச்சா கட்சி, பின் நாட்களில் ஜனதா கட்சி, லோக் தளம், சோசியலிச காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஜனதா தளமாக உருவெடுத்தது. காங்கிரஸின் வீழ்ச்சி ஆரம்பமானதும் கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் தான்.

தேசிய முன்னணி
தேசிய முன்னணி

அப்போது, இந்தியா முழுவதும் இருந்த காங்கிரஸ் எதிர்ப்பு அலையை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்ததில் நிறைந்திருக்கிறது இவரின் அரசியல் ராஜதந்திரம். டெல்லியில் இருந்துகொண்டு மாநிலங்களைப் பார்க்கும் தேசியத் தலைவராக இல்லாமல், மாநிலங்களை கவனித்தார், மக்களை நேசித்தார். அதன் நீட்சியாகவே, திமுக, தெலுங்கு தேசம், அசாம் கண பரிஷத் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய முன்னணி உருவானது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த கூட்டணியை அங்கீகரித்து, இவர்களுக்கான முதல் வெற்றியை பரிசளித்தவர்களாக தமிழர்கள் இருந்தார்கள். 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வி.பி. சிங் பரப்புரை மேற்கொண்ட திமுக பெரும் வெற்றி பெற்றது. கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

அவர்கள் அப்படித்தான்...
அவர்கள் அப்படித்தான்...

அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தனிபெரும் கட்சியாக 200 இடங்களை வென்றிருந்தாலும், ராஜீவ் காந்தியால் பிரதமராக முடியவில்லை. அவருக்கு கிடைக்காத இடதுசாரிகளின் ஆதரவு வி.பி. சிங்-க்கு கைகூடியது. ஆம், இடதுசாரிகள், பாஜக ஆதரவோடு ஆட்சி அமைத்தது தேசிய முன்னணி. சுதந்திர இந்தியாவின் ஏழாவது பிரதமராக பதவியேற்றுக்கொண்டார் வி.பி. சிங்.

ஜோதி பாசுவுடன்
ஜோதி பாசுவுடன்

ஏழை, எளிய மக்களின் வாழ்வியல் முன்னேற்றம் என்ற தன் சிறு வயது கனவுக்கு உயிர் கொடுத்தார். மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவமளித்தார். பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. அரசியல் காய் நகர்த்தல்களில் சிக்கித் தவித்த காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று காவிரி நடுவர் மன்றத்தை அமைத்து கர்நாடகாவில் இருந்து ஆண்டுதோறும் 205 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தந்தார்.

10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்திய வி.பி. சிங், ‘பெரியார், அம்பேத்கரின் கனவுகள் நனவாக்கப்படுகிறது’ என கர்ஜித்தார். சமூக நீதிக்கு எதிரான கூட்டத்தின் உதவியோடு ஆட்சி அமைத்து... அவர்களையே அடிகலங்க வைத்ததெல்லாம் இவரது வரலாற்றின் பொன்னான பக்கங்கள்.

வி.பி. சிங்
வி.பி. சிங்

அவர்களும் இதை எளிதில் விடவில்லை. மண்டல் திட்ட அமலாக்கத்திற்கு எதிராக போராட்டத்தை கையிலெடுத்த மதவாதிகளின் ஆட்டம், வட இந்தியாவில் கட்டுக்கடங்காமல் இருந்தது. ஆட்சிக்கு ஆபத்து என்பதை உணர்ந்த இவர், அதுகுறித்தெல்லாம் கவலையின்றி மக்கள் நலன் குறித்த சிந்தனையில் இருந்தார். இவரின் சமூகநீதி போராட்ட குணத்தைக் கண்ட கலைஞர் கருணாநிதி, இவருக்கு ‘சமூகநீதிக் காவலர்’ என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். அதுவே அவரின் அடையாளமாக மாறியது.

வி.பி. சிங்கை கெளரவிக்கும் கருணாநிதி
வி.பி. சிங்கை கெளரவிக்கும் கருணாநிதி

இதற்கிடையே, தேசிய முன்னணிக்கு வழங்கிவந்த ஆதரவை பாஜக திரும்பப்பெற்றது. நாடாளுமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க முடியாமல் வி.பி. சிங் தனது பிரதமர் பதவியை இழந்தார். அப்போது அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை, “இன்று என் கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம்... ஆனால் நான் அடைய வேண்டிய இலக்கை என்றோ அடைந்துவிட்டேன். இனி மரியாதையோடு நாங்கள் ஆட்சியை விட்டு வெளியேறுகிறோம். அதற்காக பெருமையும்படுகிறோம். அரசியலில் இறுதியானது, கடைசியானது என்று எதுவுமே கிடையாது”. இந்த வார்த்தைகளில் நிறைந்திருக்கிறது 11 மாத ஆட்சியின் சாதனைகள்.

வி.பி. சிங்
வி.பி. சிங்

இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள் தலை தூக்கும்போதெல்லாம், அதற்கு எதிராக தன் குரலை அழுத்தமாக பதிவு செய்த இவர், ’அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் தமிழனாய் பிறக்கவே ஆசை’ என தமிழர்களின் மீதான தனது நேசத்தை வெளிப்படுத்தியவர்.

ஏனெனில், அவரின் எண்ணம் முழுவதும் ‘சமூகநீதி’!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.