புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதை தவிர்க்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான சந்தேகங்களை தீர்க்க இந்த விடுமுறையை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையை புதுச்சேரி கல்வித்துறை உருவாக்கியுள்ளது
மாணவர்கள் தங்கள் பொதுத்தேர்வு குறித்த பாடங்களில் சந்தேகங்களை இந்தக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இந்த மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையில் பாட வாரியாகத் தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொலைபேசி வாயிலாக நேரடியாகப் பேசலாம். வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு பெறலாம் என்றும் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Directorate of school education puducherry](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6623230_407_6623230_1585746852871.png)
இதற்காக பாடவாரியாக ஆசிரியர்களின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன பின்வருமாறு:
- தமிழ்
எல்.ஷகிலா - 95667 28352
- ஆங்கிலம்
எம்.ஜோன்சி - 99441 98425
- கணிதம்
எம்.தமீஸ் - 72009 18139
- இயற்பியல் மற்றும் வேதியியல்
எஸ்.ராஜ்குமாா் - 99942 03828
- உயிரியல்
ஆா்.தேவிகா - 80154 23235
- சமூக அறிவியல்
பி.வானதி - 99941 96886
மேற்கூறப்பட்டுள்ள ஆசிரியா்களிடம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.