ETV Bharat / bharat

கோவாக்சின் மருந்தின் செயல்திறனை அதிகரிக்கும் துணை மருந்து! - இந்தியா செய்திகள்

பாரத் பயோடெக் நிறுவனம், கன்சாஸ் நிறுவனத்தின் துணை மருந்தான அல்ஹைட்ராக்ஸிகிம்- IIஐப் பயன்படுத்தி கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

கோவாக்சின்
கோவாக்சின்
author img

By

Published : Oct 5, 2020, 6:52 PM IST

ஹைதராபாத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி நிறுவனம் ஆகிவற்றுடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினைக் கண்டறிந்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி, புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் (என்ஐவி) தனிமைப்படுத்தப்பட்ட SARS-CoV-2 வைரஸின் ஜீனின் பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும்.

இந்நிலையில் கன்சாஸ் நிறுவனத்தின் துணை மருந்தான அல்ஹைட்ராக்ஸிகிம்- IIஐப் பயன்படுத்தி இந்தத் தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்கும் மருத்துவப் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்கும் கூறுகள், துணை மருந்துகளின் தேவை ஆகியவை குறித்து விளக்கிய பாரத் பயோடெக் நிறுவனத்தின் இயக்குனர் கிருஷ்ணா எலா, இந்தத் துணை மருந்து நோய்க்கிருமிகளுக்கு எதிராக நீண்டகால பாதுகாப்பு கிடைக்க வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.