மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தனிலும் காங்கிரஸ் ஆட்சி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக இளம் தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தான் அரசியல் குழப்பம் குறித்து ராஜஸ்தான் சபாநாயகர் ஜோஷியும் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டும் உரையாடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
ராஜஸ்தான் சபாநாயகர் ஜோஷியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஜோஷின் வீட்டுக்கு வைபவ் கெலாட் ஜூலை 29ஆம் தேதி நேரில் சென்றிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் உரையாடிய வீடியோவை சபாநாயகரிடம் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் தவறுதலாக வீடியோ எடுத்து ஊடகத்தினருக்கு அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில், 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகினால் நிச்சயம் ஆட்சி கலைந்துவிடும் என்று ராஜஸ்தான் சபாநாயகர் ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும், தனிப்பட்ட முறையில் தான் ஒவ்வொரு உறுப்பினரையும் தொடர்பு கொண்டதாலேயே இது(ஆட்சி நிலைத்திருப்பது) சாத்தியமானது என்றும் வேறு ஒரு நபர் இருந்திருந்தால் நிச்சயம் ஆட்சி தப்பியிருக்காது என்றும் ஜோஷி அதில் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் ஆட்சி நிச்சயம் கலைந்திருக்கும் என்று சபாநாயகரே கூறும் இந்த வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: 'நாட்டை நாசமாக்கும் நரேந்திர மோடி' - தாக்கும் ராகுல்