ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, கிராம நிர்வாகிகள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் தாக்குதலுக்கு உள்ளாகிவருகின்றனர். இது குறித்து காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "பாகிஸ்தானுக்கு ஆதரவாக வளர்ச்சி திட்டங்களை கெடுக்கும் விதமாக மக்கள் பிரதிநிதிகள் தாக்கப்பட்டுவருகின்றனர்.
மக்கள் பிரிதிநிதிகளின் பாதுகாப்பை நிலைநாட்டும் வகையில், அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். கிராம நிர்வாகிகளை தாக்கும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக மக்களே வெகுண்டெழ வேண்டும். தங்களுடைய பிரதிநிதிகளே தாக்கப்படுவதால் இதனை மக்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாது" என்றார்.
தெற்கு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனரே என்று கேள்வி எழுப்பியதற்கு, "இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களின் ரத்த மாதிரி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ராணுவத்தின் தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: சுட்டு வீழ்த்தப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா முக்கிய பயங்கரவாதி!