ஒடிசா மாநிலம், மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள கலாடப்பள்ளி கிராமத்தில் சபேரி என்ற ஆறு செல்கிறது.
இந்த ஆற்றிலிருந்து ஐந்து அடி முதலை ஒன்று நேற்று வெளியேறியது. இதைப் பார்த்த கிராம மக்கள், முதலையென்றும் பாராமல், மீனின் செதிலை உரிப்பது போல், அதன் கை, கால்களை வெட்டினார்கள்.
அதைத் தொடர்ந்து தலை, உடல், என முதலையை தனித்தனியாக வெட்டி அதன் இறைச்சியை ஆளாளுக்கு பங்கு போட்டனர். அதன் பின்னர் அதனை சமைத்து சாப்பிட்டனர்.
இந்தத் தகவல் வனத்துறையினருக்கு தெரியவந்ததும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட கிராம மக்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் பிரதீப் மிராஸ் கூறுகையில், "முதலை கொல்லப்பட்ட தகவல் கிடைத்தவுடன், அங்கு விரைந்து சென்றோம். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து விசாரிக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர், என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை