ஆந்திர மாநிலம் குண்டூர் மாநிலம் பில்லட்லா கிராமத்தில் திறக்கப்பட்ட மதுக்கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ பகுதிக்கு வந்த காவலர்கள், கிராம மக்களிடம் சமாதானம் பேசினர். ஆனால், காவலர்களின் சமாதானத்தை கிராம மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து காவலர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது.
அப்போது கடந்த ஒன்றரை மாதமாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது திறக்கப்பட்டிருப்பதால் பலரும் மது வாங்க தங்கள் கிராமத்துக்கு வருகின்றனர். இதனால் கிராமத்தில் கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என கவலை தெரிவித்தனர். கோவிட்-19 தடுப்பு முழு நடவடிக்கைக்கு பிறகு மதுபானங்கள் விலை 50 விழுக்காடு வரை அதிகரிக்கப்பட்டு, மதுகடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுபான நுகர்வு ஊக்குவிப்பைத் தடுக்கும் விதத்தில் விலை ஏற்றப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுபான விலையில் 50 விழுக்காடு ஏற்றப்பட்டுள்ள நிலையில், சில்லறை விலை 75 விழுக்காடு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்றால் 1,777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தேடப்படும் பயங்கரவாதி ரியாஸ் நாய்கோ என்கவுண்டரில் சுட்டுக்கொலை