உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்துவருகிறது. இதில் பித்தோராகர் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளன.
இதில் அம்மாவட்டத்தில் சபா கார்டி கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமின்றி, அக்கிராமத்திற்கு நகரத்திற்கும் இணைப்பாக காளி ஆற்றின் குறுக்கே இருந்த பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து காளி ஆற்றின் குறுக்கே அக்கிராம மக்களே சேர்ந்து, தங்களது சொந்த செலவில் மரப்பாலத்தை கட்டியுள்ளனர். இதனால் தற்போது அவர்களது அன்றாட வாழ்க்கையை நடத்திவருகின்றனர்.
இது குறித்து அக்கிராமத் தலைவர் முன்னி தேவி கூறுகையில், "பொதுப்பணித் துறை இந்த வேலையை செய்வதாக கூறியிருந்தது. ஆனால் மக்களின் தேவைகளுக்காக அவர்களே செய்துள்ளனர். இதில் பாலங்கள் மட்டுமின்றி கிராம மக்கள் சாலைகளையும் அமைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
உத்தரகாண்டில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, பல பகுதிகளில் கிராமங்களுக்கு இடையிலான பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கைலாஷ் -மன்சரோவர் யாத்திரா பாதையும் நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்டது.
இதையும் படிங்க...மனைவியின் உயிரை மீட்ட கணவரின் காதல் - கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சிக் கதை!