அசுர வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நம் நாட்டில் இன்றுவரை மின்சாரமே கண்டிராத கிராமம் இந்தியாவில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ளது த்ரிஷூலி கிராமம். இங்கு 100 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இக்கிராம மக்கள் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமலேயே தங்கள் நாட்களைக் கழித்துவருகின்றனர்.
தற்போது த்ரிஷூலி கிராமத்தில் படிக்கும் மாணவர்கள் மின்சாரம் இல்லாததால் சூரியன் மறைவிற்குப் பிறகு படிக்க முடியவில்லை. இதனால் த்ரிஷூலி கிராம மக்கள் தங்களுக்கு மின்சார வசதி செய்து தர வேண்டுமென பல்ராம்பூர் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் குமாரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து பல்ராம்பூர் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் குமார், ‘மின்சாரமே கண்டிராத த்ரிஷூலி கிராம பிரச்னை குறித்து "முக்ய மந்திரி மஜ்ரா டோலா வித்யுட்டிகாரன்" (மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கும்) திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்’ என்றார்.