மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜாஸ்லோக் மருத்துவமனையில் கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆறு செவிலியருக்கு கோவிட்-19 பெருந்தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இப்போது அவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும், 15 செவிலியர் மும்பை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை தனிமைப்படுத்தப்பட்ட தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், செவிலியருக்கான தேவைகளை இன்னும் விரைந்து வழங்க வேண்டுமென கோரிக்கைவிடுத்து மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு இரண்டாவது முறையாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த செவிலியருக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இடத்தில் அவற்றை செய்துதர வேண்டும். அந்த இடத்தை சுத்தமானதாகவும், தனித்தனி குளியலறை வசதி கொண்டதாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இந்த விஷயத்தில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தாக்கரே நேரடியாகத் தலையிட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் உள்ள குறைகளைக் களைய வேண்டும். கோவிட்-19 பெருந்தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கவனித்துக்கொள்வதில் தங்கள் நேரத்தை செலவழிக்கும் செவிலியரின் ஆரோக்கியத்தையும் உறுதிசெய்ய வேண்டும்.
அவர்கள் எங்கள் சுகாதார அமைப்பின் முன்னணிப் படை வீரர்கள் என்பதால் அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
செவிலியர் பிரச்னை தொடர்பாக ஏப்ரல் 6ஆம் தேதி தாக்கரேவுக்கு கேரள முதலமைச்சர் விஜயன் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - புதிய வீட்டில் வாழவுள்ள மூதாட்டி!