ETV Bharat / bharat

கேரளா தங்கக் கடத்தல் : முதலமைச்சர் பினராயி விஜயனை பதவி விலகக் கோரும் பாஜக ! - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம் : தூதரக ராஜதந்திர பொருள்கள் மூலம் கேரளாவில் தங்கக் கடத்தப்பட்ட வழக்கில் உண்மை வெளிவர வேண்டுமானால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கேரளா தங்கக் கடத்தல் : முதலமைச்சர் பினராயி விஜயனை பதவி விலக கோரும் பாஜக !

author img

By

Published : Sep 1, 2020, 10:27 PM IST

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி ராஜந்திர பொருள்கள் கொண்டுவரப்பட்ட பெட்டிகளிலிருந்து, ஏறத்தாழ 30 கிலோ எடைகொண்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து என்ஐஏ மற்றும் சுங்கத்துறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில், கேரள முதலமைச்சரின் முதன்மைச் செயலர் சிவசங்கர், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட பலரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் விசாரணையின் ஒரு பகுதியாக சாட்சியங்களை சேகரிக்க என்ஐஏ குழுவானது இன்று கேரள மாநிலத்தின் தலைமை செயலகத்திற்குள் நுழைந்து முதல் கட்டப் பணிகளைத் தொடங்கியது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேளர மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன், "தங்கக் கடத்தல் வழக்கில் தங்களது விசாரணையை முன்னெடுப்பதற்காக என்ஐஏ குழு செயலகத்திற்குள் நுழைந்ததை அடுத்து கேரள மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

முதலமைச்சர் பினராயி விஜயனின் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு கேரள அரசின் மாண்பை காக்க அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

முதலமைச்சர் பிரனாயி விஜயன் அரசு ஒத்துழைக்கிறது என்ற தோற்றத்தை கொடுக்க முயன்றாலும், அது உண்மையில் ஆதாரங்களை அழிப்பதில் ஈடுபட்டுள்ளது.

தலைமை செயலகத்தில் ஏற்பட்ட தீ அனைத்தும் ஆதாரங்களை அழிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.