ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ளது புகழ்பெற்ற தால் ஏரி. இந்த ஏரி மிகவும் சுத்தமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏரியைக் காண ஆண்டுதோறும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். குளிர் காலத்தில் உறைந்து காணப்படும் இந்த ஏரி 'காஷ்மீரின் வைரக்கல்' என்று அழைக்கப்படுகிறது.
![wani](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3229076_du.jpg)
இப்படி பல புகழை கொண்டுள்ள இந்த ஏரியை வரும் சுற்றுலாப் பயணிகள் இதன் அழகைக் கண்டு ரசிக்கும் வகையில் நவீன, பாரம்பரிய கட்டடக் கலை நயத்தில் வியூ பாயிண்ட் அமைக்க அம்மாநில சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
![con](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3229076_dal.jpg)
இதற்காக தற்போது பணிகள் நடைபெற்று வருவதாக அம்மாநில சுற்றுலாத் துறை இயக்குநர் என்.ஏ. வாணி தெரிவித்துள்ளார்.
![view point](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3229076_lak.jpg)