ETV Bharat / bharat

"இந்தோ-பசிபிக் விஷன் திட்டத்தில் முக்கிய பங்காளியாக வியட்நாம் விளங்குகிறது" - மோடி

டெல்லி : இந்தியாவின் இந்தோ-பசிபிக் விஷன் திட்டத்தில் முக்கிய பங்காளியாக வியட்நாம் விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

author img

By

Published : Dec 21, 2020, 10:58 PM IST

"இந்தோ-பசிபிக் விஷன் திட்டத்தில் முக்கிய பங்காளியாக வியட்நாம் விளங்குகிறது" - மோடி
வியட்நாம் பிரதமர் என்குயென் ஸுவானுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா-வியட்நாம் ஆகிய இரு நாடுகளிடையே இடையே உச்சிமாநாடு இன்று (டிச21) நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் வியட்நாம் பிரதமர் என்குயென் ஸுவானுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்போது பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோட, “ வியட்நாமுடனான இந்தியாவின் உறவுகளை இந்தியா ஒரு நீண்ட கால மற்றும் திறஞ்சார்ந்த முன்னோக்கிய பார்வையில் அணுகுகிறது. இந்தியாவின் இந்தோ-பசிபிக் விஷன் திட்டத்தில் முக்கிய பங்காளியாக வியட்நாம் விளங்குகிறது.

கிழக்கு திசை சார்ந்த இந்தியாவின் செயல்பாடுகளில் ஒரு முக்கிய தூணாக வியட்நாம் திகழ்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான திறஞ்சார்ந்த கூட்டாண்மை நோக்கம் கணிசமாக விரிவடைந்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்த வளர்ச்சி, வளம் ஆகியவற்றை நிலைநாட்டுவதே எங்கள் பொதுவான நோக்கம். அவற்றைப் பேணுவதில் எங்கள் ஒத்துழைப்பு ஒரு முக்கிய பங்களிப்பை செய்ய முடியும்.

கரோனா வைரஸ் தொற்றுநோயை வியட்நாம் அரசு கையாண்ட விதம் பிரமிப்பை ஏற்படுத்தியது. அதற்காக வியட்நாமைப் பாராட்டிகிறோம்.

இருதரப்பு உறவுகளில் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றான பாதுகாப்பு ஒத்துழைப்பு வேகமாக விரிவடைந்துவருகிறது. இரு நாடுகளும் இந்தோ-பசிபிக் பகுதியில் மிக்கிய பங்கு வகிக்கின்றது. பிராந்தியத்தில் ஒத்துழைப்பு பணிகளை மேலும் விரிவாக்க சாத்தியங்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன” என்றார்.

கடந்த ஆண்டு பாங்காக்கில் நடந்த கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டில், இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி (ஐ.பி.ஓ.ஐ) எனும் பார்வையை இந்திய அரசு முன்மொழிந்தது. கடல்சார் களத்தை பாதுகாக்கவும், நிலையாக பயன்படுத்தவும் அர்த்தமுள்ள முயற்சிகளை மேற்கொள்ள ஐ.பி.ஓ.ஐ. அமைக்க முன்மொழியப்பட்டது.

இரு நாடுகள் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துதல், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்குதல் ஆகியவை குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.